தீவிரவாதம் தொடர்பான மேலும் சில ரகசிய ஆவணங்கள் ரெயிலில் அனாதையாக கிடந்தன: இங்கிலாந்தில் மீண்டும் அதிர்ச்சி

Read Time:1 Minute, 6 Second

லண்டனில் கடந்த புதன்கிழமை ரெயிலில் பயணம் செய்த ஒரு உளவுத்துறை அதிகாரி, அல்-கொய்தா தீவிரவாதிகள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ரெயிலிலேயே தவற விட்டுச் சென்றார். பின்னர் இதை ஒரு பயணி கண்டெடுத்து ஒப்படைத்தார். இதனால் அந்த அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்நிலையில், இதுபோன்ற மேலும் சில ரகசிய ஆவணங்கள், லண்டன் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு ரெயிலில் அனாதையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் தீவிரவாதிகளின் நிதி வசூல், போதை மருந்து கடத்தல், அன்னிய செலாவணி மோசடி போன்றவை தொடர்பான விசாரணை ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த இச்சம்பவங்களால், இங்கிலாந்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அருங்காட்சியகம் ஆனது நேபாள அரண்மனை
Next post தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை தடை செய்யுமாறு கோரிக்கை – ஐரோப்பிய ஒன்றியத்திடம் அரசு முன்வைப்பு