ஒபாமாவுக்கு அல்கோர் ஆதரவு

Read Time:1 Minute, 17 Second

அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள பாரக் ஒபாமாவுக்கு முன்னாள் துணை அதிபர் அல்கோர் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்கா பின்பற்றி வந்துள்ள கொள்கைகளை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மீண்டும் தொடர முடியாது என்றும் அல்கோர் கூறியிருக்கிறார். மிச்சிகன் மாகாணத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பாரக் ஒபாமாவை ஆதரித்து பேசிய அல்கோர் தற்போதுள்ள சவால்களை மீறி உலகில் முன்னணி நாடாக அமெரிக்கா தொடர்ந்து விளங்க வேண்டுமென்றால் புதிய தலைமை வேண்டும் என்று கூறினார். நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அமெரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சிறந்த அதிபராக ஒபாமா விளங்குவார் என்றும் அல்கோர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயஸ்ரீ தம்பியை மணந்தார் கனிகா
Next post புலிகள் இயக்கத்தின் லண்டன் நிதி சேகரிப்பாளர் கொழும்பில் கைது