நீண்ட நாட்களுக்கு பின் தொலைக்காட்சியில் தோன்றிய கியூப முன்னாள் தலைவர் காஸ்ட்ரோ

Read Time:2 Minute, 28 Second

கியூப முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ தோன்றும் “வீடியோ’ காட்சியொன்று, 5 மாதங்களுக்கு பின் முதல் தடவையாக அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் தனது இளைய சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் அதிகாரத்தைக் கையளித்த பின், பிடெல் காஸ்ட்ரோ தோன்றிய முதலாவது , “வீடியோ’ காட்சியாக இது விளங்குகிறது. பிடெல் காஸ்ட்ரோ 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுக வீனமுற்றத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் முன்னிலையில் இதுவரை தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிடெல் காஸ்ட்ரோ ஹாவானாவில் வைத்து தனது இளைய சகோதரரும், கியூப ஜனாதிபதியுமான ராவுல் காஸ்ட்ரோ மற்றும் வெனிசுலா ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் ஆகியோருடன் உரை யாடுவது இந்த மௌன வீடியோ காட்சியில் படமாக்கப்பட்ள்ளது. கியூப முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோவுடனான இச்சந்திப்பு குறித்து ஹுகோ சாவேஸ் குறிப்பிடுகையில், இச்சந்திப்பின்போது தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடியதாக கூறினார். “”பிடெல் காஸ்ட்ரோ மிகவும் உயிரோட்டமாகவுள்ளார். அவர் சிறந்த முறையில் சிந்திக்கிறார். எழுகிறார். கியூபாவுக்கும் எமது லத்தீன் அமெரிக்காவுக்குமான முக்கிய தந்திரோபாயங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குகிறார்” என ஹுகோ சவோஸ் குறிப்பிட்டார். பிடெல் காஸ்ட்ரோ, ராவுல் காஸ்ட்ரோ மற்றும் ஹுகேளை சாவேஸ் ஆகியோருக்கிடையிலான உரையாடல் சுமார் 3 மணித்தியாலங்கள் நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகத் தமிழர் இயக்கத்தை மட்டுமல்ல, புலிகளின் ஏனையஅமைப்புகளையும் கனடிய அரசு தடைசெய்ய வேண்டும் -ராகுலன்
Next post புளொட் இயக்கத்தின் ஓழுக்காற்று நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க மறுத்து தலைமறைவாக வாழ்ந்தவர் ஆச்சிராஜன்! பணத்திற்காக எதையும் செய்வேன் -கூறுகிறார் ரிபிசி ராமராஜன்..