By 16 December 2017 0 Comments

பெண் ஒருவர் ஆணாக மாறி பெண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார்..!! (வீடியோ)

பெண் ஒருவர் ஆணாக மாறி அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் ஒன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பியோனிஸ் நகரை சேர்ந்த கச்சி சுல்லிவான் என்பவர் பெண்ணாக பிறந்து வளர்ந்து ஆணுடன் திருமண பந்தத்தில் இணைந்து ஒரு குழந்தையையும் பெற்றுள்ளார்.

அதன் பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குறித்த பெண் ஹார்மோன் சிகிச்சை மூலம் ஆணாக மாறினார். இதையடுத்து மீண்டும் ஸ்டீவன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஸ்டீவனுடன் வாழ்ந்த குறித்த பெண் கடந்த பெப்ரவரி மாதம் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். சமீபத்தில் இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவருக்கு சுகப்பிரசவம் இடம்பெறவில்லை அதனால் மருத்துவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சை மூலம் குறித்த பெண் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

மேலும் வர்த்தகவியல் பட்டம் படித்துள்ள இவர் பெண்ணாகவும் ஆணாகவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam