அரசுக்கு சொந்தமான 8 வாகனங்கள் – கம்ப்ïட்டர்களை திரும்ப ஒப்படையுங்கள்: முன்னாள் மன்னருக்கு நேபாள அரசு உத்தரவு

Read Time:4 Minute, 11 Second

அரசுக்கு சொந்தமான 8 வாகனங்களையும், கம்ப்ïட்டர்களையும் திரும்ப ஒப்படையுங்கள் என்று அந்த நாட்டின் முன்னாள் மன்னர் ஞானேந்திராவுக்கும், அவரது மகன் பராசுக்கும் அந்த நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது. நேபாள நாட்டின் கடைசி மன்னராக இருந்தவர் ஞானேந்திரா. இவரது ஆட்சிக்காலத்தில் தான் மன்னருக்கு எதிராக கிளர்ச்சி வெடித்தது. இதனால் அவர் ஆட்சியை இடைக்கால அரசின் கையில் ஒப்படைத்து விட்டு ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நடந்தது. இதில் மாவோயிஸ்டுகள் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றினர். மாவோயிஸ்டுகள் தலைமையிலான கூட்டணி ஆட்சி விரைவில் ஏற்பட இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் முதல் முறையாக கூடியதுமே, மன்னராட்சியை ரத்து செய்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து அரண்மனையை விட்டு மன்னர் வெளியேற வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது. இதை ஏற்று மன்னர் கடந்த புதன்கிழமை அரண்மனையை விட்டு வெளியேறினார். அப்படி வெளியேறும்போது அவர் தன்னுடன் 4 வாகனங்களை எடுத்துச்சென்று விட்டார். அவருக்கு ஒரு கார் மற்றும் ஒரு ஜீப் ஆகியவற்றை மட்டும் கொடுக்க அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்து உள்ளது. இதனால் அவர் எடுத்துச்சென்ற 2 வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்று அந்த நாட்டு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

மகன் எடுத்துச் சென்ற கம்ப்ïட்டர்கள்

அதேபோல அவர் மகன் பராஸ் அரசாங்கத்துக்கு சொந்தமான 6 வாகனங்களை பயன்படுத்தி வருகிறார். சில டெஸ்க்டாப் கம்ப்ïட்டர்களையும், லேப்டாப் கம்ப்ïட்டர்களையும் பயன்படுத்தி வருகிறார்.

இந்த வாகனங்களும், கம்ப்ïட்டர்களும் இயற்கை பாதுகாப்புக்கான நேபாள அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமானவையாகும். இதன் தலைவராக பராஸ் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்களையும், கம்ப்ïட்டர்களையும் திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்றும் அரசாங்கம் அவரை கேட்டுக்கொண்டு உள்ளது.

முன்னாள் மன்னரின் முதன்மைச்செயலாளராக இருந்த பசுபதி பக்த மகாராஜன் மூலம் மன்னர் எடுத்துச்சென்ற வாகனங்களை ஒப்படைக்கவேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டு உள்ளது.

பசுமாடுகள்

இதற்கிடையில் மன்னர் வரலாற்று ஆவணங்கள் எதையும் எடுத்துச்சென்று இருக்கிறாரா? என்று அரண்மனை சொத்துக்களை பாதுகாக்கும் குழு மன்னரை எழுத்து மூலம் கேட்டது. இதற்கு அந்த மாதிரி ஆவணம் ஏதும் தன்னிடம் இல்லை என்று முன்னாள் மன்னர் பதில் அளித்தார்.

அதோடு மன்னரின் நாராயணஹிதி அரண்மனையில் பாராமரிக்கப்பட்டு வரும் 61 பசுமாடுகளும் வேளாண் அமைச்சரகத்தின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகத்திலேயே பணக்கார நாய்
Next post கனடா நாட்டு கடற்கரையில் ஒதுங்கும் கால்கள்