பாக். மீது நடவடிக்கை: ஒபாமா
Read Time:1 Minute, 14 Second
பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வராமல் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க முடியாது என அமெரிக்க ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமா கூறியுள்ளார். வாஷிங்டனில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அதிபர் புஷ் மற்றும் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் மெக்கைன் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தார். ஈராக் மீது போர் தொடுப்பதற்கு பதில் அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய அவர், ஆப்கானிஸ்தானுக்கு மேலும் துருப்புக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறினார். பாகிஸ்தானின் அணுகுமுறையில் மாற்றத்தை கொண்டு வராமல் தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
Average Rating