By 19 December 2017 0 Comments

சூர்யா ஜோடியாகும் சாய் பல்லவி..!!

சூர்யா நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது.

சூர்யா அடுத்ததாக செல்வ ராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஜனவரி இரண்டாவது பாதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். தீரன் படத்தை தொடர்ந்து சூர்யா படத்திலும் ரகுல் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், நடிகை சாய் பல்லவி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் செல்வராகவன் – சாய் பல்லவி இடையே இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதற்கு சாய் பல்லவி ஒத்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படத்தில் சாய் பல்லவி மற்றொரு நாயகியாக நடிக்கிறாரா, அல்லது அவரது கதாபாத்திரம் என்ன என்பதை அறிய காத்திருக்கத் தான் வேண்டும். முன்பே, சாய் பல்லவி, தான் ஒரு சூர்யா ரசிகை என்றும், அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வ ராகவன் தற்போது சந்தானத்தை வைத்து `மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா படத்தை இயக்க இருக்கிறார்.



Post a Comment

Protected by WP Anti Spam