ஓட்டுப்போட மறந்த அமெரிக்காவில் உள்ள கிராமம்
அமெரிக்காவில் உள்ள கிராமம் பர்னெஸ் கவுண்டி. வடக்கு டகோட்டா மாநிலத்தில் உள்ளது. இந்த கிராமத்தின் மேயர் தேர்தல் கடந்த 10-ந்தேதி நடந்தது. அப்போது ஓட்டுப்போட ஒருவர் கூட வரவில்லை. தேர்தலில் போட்டியிட்டவர்கள் கூட ஓட்டுப்போடுவதற்கு மறந்து விட்டனர். எல்லோருக்கும் வேலை இருந்தது. அவர்கள் தங்கள் வேலையில் மும்முரமாக இருந்ததால் ஓட்டுப்போட வரவில்லை என்கிறார் மேயராக இருக்கும் புருடெவோல்டு. இவர் இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இவரும் ஓட்டுப்போட வரவில்லை. இவர் மனைவி ரூத், உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். இவரும் ஓட்டுப்போவில்லை. நான் ஓட்டுப்போட செல்லவேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் கதிர்கள் முற்றி விட்டன. கதிர் அறுக்காவிட்டால் பயிர் வீணாகி விடும் என்பதால் நான் விவசாய வேலையில் தீவிரமாகி விட்டேன் என்கிறார். இவர் மனைவி, தபால் அதிகாரியாக வேலை செய்கிறார். அதோடு பிïட்டி ஷாப்பும் நடத்துகிறார். அவரும் என் வேலையில் நான் பிசியாக இருந்து விட்டேன் என்கிறார்.
Average Rating