பிக்பாஸிற்கும், பிரபல ரிவிக்கும் ஏற்பட்ட மோதல்… கைமாறுகிறதா பிக்பாஸ் சீசன் 2?..!!

Read Time:2 Minute, 13 Second

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதில் கலந்து கொண்ட ஓவியா பெரும் புகழ் பெற்றதோடு மற்றவர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக முதல் சீசனுக்காக போடப்பட்ட செட்களை மாற்றும் பணி நடந்து வருகிறது. மேலைநாட்டு பாணியில் மாற்றப்படுகிறது.

அதோடு பிக்பாஸ் 2வது சீசன் பிரபல ரிவியில் ஒளிபரப்பாவது சந்தேகமாக உள்ளது. இதற்கு பிரபல ரிவிக்கும் பிக்பாஸ் தயாரிப்பாளரான என்டேமால் நிறுவனத்திற்கும் ஏற்பட்ட மோதலே காரணம் என்று கூறப்படுகிறது.

முதல் சீசனில் என்டேமால் நிறுவனம் விதித்த பல்வேறு நிபந்தனைகளுக்கு பிரபல ரிவி எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மோதல் ஏற்பட்டது.

இதனால் அடுத்த சீசனை பிரபல ரிவிக்கு கொடுக்காமல் வேறொரு ரிவிக்கு கொடுப்பதாக ஆலோசனை நடந்து வருகிறதாம். இதனால் அதிர்ச்சியடைந்த பிரபல ரிவி பிக்பாஸ் நிகழ்ச்சி கைவிட்டு சென்றால் பெரும் இழப்பு ஏற்படும் என உணர்ந்தது.

எனவே என்டேமாலின் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதோடு அடுத்த பிக்பாஸ் அடுத்த சீசனுக்கான வேலையும் தொடங்கிவிட்டது. அநேகமாக ஜனவரி முதல் வாரத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் திருமணம் செய்த இளைஞன்; விரக்தியில் குடும்பமே தற்கொலை..!!
Next post பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டால் ஆபத்து..!!