விம்பிள்டன் டென்னிஸ் 2008: இவனோவிச், ஜான்கோவிக் முன்னிலை

Read Time:2 Minute, 40 Second

இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ள கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் மகளீர் ஒற்றையர் பிரிவில் கிண்ணம் வெல்லக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளவர்களில் பிரான்ஸ் பகிரங்க கிண்ணத்தைக் கைப்பற்றியவரும், உலகின் முதன்நிலை வீராங்கனையுமான சேர்பியாவின் அனா இவனோவிக் முன்னணியிலுள்ளார். 2007ஆம் ஆண்டு விம்பிள்டன் பட்டம் வென்ற செரினா வில்லியம், மற்றும் இரண்டாமிடத்தைப் பிடித்த வீனஸ் வில்லியம் ஆகியோருக்கு கிண்ணம் வெல்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவுள்ளதாகவும் டென்னிஸ் தரநிலைகளை அறிவிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. அனா இவனோவிக்கு அடுத்த நிலையில் சேர்பியாவின் மற்றுமொரு வீராங்கனையும், 2ஆம் நிலை வீராங்களையுமான ஜான்கோவிக்கு வாய்ப்பு உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதியில் இளம்வீராங்களை டினாறா சபீனாவிடம் தோல்வியடைந்த முன்னாள் முதன்நிலை வீராங்கனையான மரியா ஷரபோவா, விம்பிள்டனை வெல்லக் கூடியவர்கள் வரிசையில் 3வது இடத்திலுள்ளார். இவர் ஏற்கனவே ஒரு முறை விம்பிள்டன் மகளீர் பட்டத்தை வென்றவர். ஆனாலும் மரியா ஷரபோவா தற்போதைய தரநிலையில் 3வது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது. விம்பிள்டன் தொடரில் சாதிக்கக் கூடிய வீராங்கனைகளின் பட்டியவில், குட்நட்சோவா, எலீனா டென்டெற்றீவா, டினாறா சபீனா ஆகியவர்களும் முன்னணியிலுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், சேர்பியாவின் அனா இவனோவிக்கே அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. விம்பிள்டன் கிண்ணத்தை வென்றால் அது, அவருடைய இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இத்தாலி நாட்டில் முன்னாள் காதலியை கடத்தி வீட்டு வேலை செய்ய வைத்தவர் கைது
Next post 19 வயதில் பேராசிரியரான பெண்: கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார்