திருப்பதி- திருமலையிலும் விபச்சாரம்!

Read Time:3 Minute, 34 Second

திருப்பதி, திருமலைப் பகுதியில் 20 முதல் 25 இடங்களில் விபச்சாரம் கொடி கட்டிப் பறப்பதாகவும், 400க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்த கழகத்தின் இயக்குநர் சந்திரவதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருமலைப் பகுதியில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். விபச்சாரம் நடத்துவதற்கு வசதியாக 20 முதல் 25 இடங்களை மையம் போல அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். திருப்பதியில் 3,500 பாலியல் தொழிலாளர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொழிலாகவே அவர்கள் மேற்கொண்டுள்ளனர். இப்பகுதிகளுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால், எய்ட்ஸ் பரவல் ஆபத்து அதிகமாக உள்ளது. மேலும், தமிழகம் மற்றும் கர்நாடகத்திலிருந்து திருப்பதியில் வேலை பார்க்க வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் எய்ட்ஸ் பரவும் ஆபத்து உள்ளது. மே மாதம் 7064 ஆண்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில், 268 பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. புனித நகரான திருப்பதியை விபச்சார மையமாக மாற்றி வருவது அதிர்ச்சி தருகிறது என்றார் அவர். இந்தத் தகவல் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள டிவி சானல்களில் பெரிய அளவில் செய்திகள் ஒளிபரப்பி வருகின்றன. இந்த நிலையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி கே.வி.ரமணா சாரி செய்தியாளர்களை அழைத்தார். அவருடன் சந்திரவதனும் இருந்தார். சந்திரவதன் கூறுகையில், நான் சொன்னதை மீடியாக்கள் தவறாக செய்தி வெளியிட்டு விட்டன. திருப்பதி தேவஸ்தானத்தை உஷார்படுத்தும் நோக்கில்தான் நான் அவ்வாறு கூறினேன் என்றார். ஆனால் சந்திரவதன் பேட்டியில் கூறியதை நிருபர்கள் சுட்டிக ்காட்டிய போது, அவர் பதில் பேசாமல் எழுந்து போய் விட்டார். பின்னர் சாரியிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பிய போது, திருமலையில் விபச்சார மையம் எதுவும் இல்லை. பயணிகள் போல வருபவர்கள் சிலர் இதுபோல நடந்திருக்கலாம் என்று மட்டும் பதிலளித்து விட்டு கிளம்பி விட்டார். இருப்பினும் திருப்பதியிலும், திருமலையிலும் விபச்சாரம் கொட்டி கட்டிப் பறப்பதாகவும், அதை கட்டுப்படுத்தாமல் தேவஸ்தானம் மெளனம் காத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பானில் கடந்த வருடம் 33,000 பேர் தற்கொலை
Next post நிதி திரட்டுவதற்காக நிர்வாணமாக நின்ற பெண்