ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக புகார்: கணவரை ஜெயிலில் தள்ள துடிக்கும் பெண் வக்கீல்; சென்னையில் ருசிகர வழக்கு

Read Time:7 Minute, 47 Second

ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக, தனது கணவர் மீது புகார் கூறி, அவரை மோசடி சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று பெண் வக்கீல் ஒருவர் போர்க்கொடி தூக்கியுள்ளார். அவர் தொடுத்துள்ள வழக்கு விசாரணையில் உள்ளது. சென்னையில் வக்கீலாக இருப்பவர் அனு (வயது 26). இவருக்கும், மதுரையை சேர்ந்த விஜய்ஆனந்த் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பட்டதாரியான விஜய்ஆனந்த் இநëது அறநிலையத்துறையில் கணக்கியல் அதிகாரியாக பணிபுரிகிறார். திருமணமாகி அவர்கள் இருவரும் சென்னை வடபழனியில் தனிக்குடித்தனம் நடத்தினார்கள். விஜய்ஆனந்தின் தந்தை ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆவார். அனுவின் தந்தையும் மத்திய உளவுப்பிரிவு உள்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2 குடும்பங்களும் சிறந்த குடும்பங்களாகும். இந்த நிலையில், அனுவுக்கும், விஜய்ஆனந்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 4 மாதமாக நடந்த அவர்களுடைய இல்லற வாழ்க்கையில் திடீரென்று புயல்வீசி பிரிந்தனர். வழக்கம்போல கணவன்-மனைவி இடையே ஏற்படும் தகராறை தீர்க்க கோர்ட்டு அல்லது போலீஸ் உதவியை நாடுவதுபோல, அனு வக்கீல் என்பதால் தனக்கு நடந்த திருமணத்தில் சட்டப்பிரச்சினையை கிளப்பி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு போட்டார். bவரதட்சணை கொடுமை புரிந்தார் என்றோ, செக்ஸ் தொல்லை கொடுத்தார் என்றோ, மாமனார், மாமியார், நாத்தனார் கொடுமை என்றோ வழக்கமாக பெண்கள், கணவர்கள் மீது கொடுக்கும் புகார்களை அனு கொடுக்கவில்லை. தன்னுடைய கணவர் ஆண்மை இல்லாதவர் என்றும், 4 மாதம் வாழ்ந்த வாழ்க்கையில் அவரால் இல்லற சுகத்தை கொடுக்க முடியவில்லை என்றும், தனக்கு ஆண்மையில்லை என்பதை மறைத்து மோசடி மூலம் என்னை திருமணம் செய்துவிட்டார். அவர் மீது இ.பி.கோ.420 (நம்பிக்கை மோசடி) சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்பது அனுவின் வாதமாகும்.

இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு, பின்னர் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரித்தது. ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அனுவின் புகார் மனுவை விசாரித்து, அது தொடர்பான உண்மை நிலையை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ஐகோர்ட்டு தனது உத்தரவில் கூறியிருந்தது.

11/2 வருடமாக விசாரணை

சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரபாசு தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த 11/2 ஆண்டுகளாக விசாரணை நீடித்து வருகிறது. அனு உள்பட அவரது குடும்பத்தினர், விஜய்ஆனந்த் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரிடமும் விசாரணை நடந்தது. இதுதொடர்பாக விஜய்ஆனந்திற்கு ஆண்மை குறைவு உள்ளதா? என்பதை டாக்டர்களிடமும், `செக்ஸ்’ நிபுணர்களிடமும் போலீசார் ஆலோசனை நடத்தினார்கள்.

ஆண்மை குறைவு இல்லை என்பதை வைத்து மோசடி சட்டத்தின்கீழ் விஜய்ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? என்பது குறித்து சட்டநிபுணர்களுடனும் போலீசார் ஆலோசனை நடத்தியுள்ளனர். விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரி தகவல்

இந்த வழக்கின் தன்மை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இந்த வழக்கு விசித்திரமானதாக உள்ளது. வழக்கமாக கணவரை பிரிந்து வாழும் பெண்கள் விவாகரத்து கேட்டு குடும்பநல கோர்ட்டில்தான் வழக்கு தொடருவார்கள். இல்லாவிட்டால், வரதட்சணை கொடுமை புரிந்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் போலீசிலும் புகார் செய்வார்கள். ஆனால், இந்த வழக்கை பொறுத்தமட்டில் அதுபோன்ற நிலை இல்லை. ஆண்மை இல்லை என்பதை மறைத்து தன்னுடைய கணவர் திருமணம் செய்து மோசடி செய்துவிட்டார் என்றும், அது தொடர்பாக மோசடி வழக்கு பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கூறப்பட்டுள்ளது.

விஜய்ஆனந்தை பல வழிகளில் சோதித்து பார்த்தபோது அவர் திடகாத்திரமாக உள்ளார். அவர் ஒரு அலியாக இருந்திருந்தால் ஆண்மை இல்லாதவர் என்று நேரடியாக ஒரு முடிவுக்கு வந்திடலாம். நாங்கள் பல நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம். இறுதி அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளோம். விஜய்ஆனந்திடம் விசாரித்தபோது, `அவர் அனு மீது பல்வேறு குறைபாடுகளை தெரிவித்துள்ளார். அவர் குடும்ப வாழ்க்கைக்கு பொருத்தமானவர் இல்லை என்றும், 4 மாத காலத்தில் அவர் என்னை சந்தோஷமாக நடத்தவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த வழக்கை பொறுத்தமட்டில் விரைவில் ஒரு முடிவுக்கு வந்து கோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்வோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

போலீசார் குழப்பம்

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரை பொறுத்தமட்டில் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்ஆனந்த் ஆண்மை உள்ளவரா? இல்லாதவரா? என்பதை கண்டறிவதிலும், ஆண்மை இல்லாதவர் என்ற முடிவுக்கு வரும்போது, அது தொடர்பாக மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்க முடியுமா? என்பதிலும் அவர்கள் குழம்பிய நிலையில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக புகார்: கணவரை ஜெயிலில் தள்ள துடிக்கும் பெண் வக்கீல்; சென்னையில் ருசிகர வழக்கு

  1. this is good, and many people has to come forwqrad like this. Injustice to all womankind

Leave a Reply

Previous post ஈராக் மீது போர் நடத்தியதற்கு பதிலாக அல்கொய்தாவை அழித்து இருக்கவேண்டும்: ஒபாமா சொல்கிறார்
Next post லண்டனில் இந்தியர் ஒருவர் நடத்தி வரும் தாமரை விடுதிக்கு விருது