செவ்வாயில் தரைக்கு அடியில் பனிக்கட்டி இருப்பதை ஃபீனிக்ஸ் விண்கலம் உறுதி
சிவப்பு கிரகமான செவ்வாயில் தரைக்கு அடியில் பனிக்கட்டி இருப்பதை ஃபீனிக்ஸ் விண்கலம் உறுதி செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ஃபீனிக்ஸ் உறுதி செய்துள்ளது விஞ்ஞானி களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஃபீனிக்ஸ் விண்கலம் கடந்த மாதம் 25ந் தேதி தரையிறங்கியது. அதுமுதல் ஃபீனிக்ஸ் செவ்வாய் கிரகத்தில் தரையை தோண்டி வெள்ளை நிறத்தில் காணப்படும் பொருட்களை ஆய்வு செய்து வருகிறது. அது உப்பு அல்லது பனிக்கட்டியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 15ந் தேதி ஃபீனிக்ஸ் பள்ளம் தோண்டி அதனை புகைப்படம் எடுத்தது. அப்போது 8 வெள்ளை நிற கட்டிகள் காணப்பட்டது. மீண்டும் கடந்த வியாழக்கிழமை அதே பகுதியில் புகைப்படம் எடுக்கப்பட்ட போது அவற்றை காணவில்லை. எனவே அவை பனிக்கட்டிகளாக இருக்கலாம் என்றும், சூரிய ஒளியில் அவை ஆவியாகியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். செவ்வாய் கிரகத்தில் தரைக்கு அடியில் தண்ணீர் இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கலிபோர்னியாவில் செய்தியாளர் களிடம் பேசிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating