தூக்கம் வர மூச்சுப்பயிற்சி செய்யுங்க..!!

Read Time:2 Minute, 21 Second

இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருக்கிறது. கஷ்டப்பட்டு தூக்கத்தை வரவழைத்தாலும் நள்ளிரவில் திடீர் விழிப்புக்கு பிறகு தூக்கத்தை தொடரமுடியாமல் அவஸ்தைப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தடையின்றி எளிதாக தூக்கத்தை தொடரும் நோக்கில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர் ஆண்ட்ரூவெய்ல் என்பவர் புதிய யுக்தியை கண்டுபிடித்துள்ளார். அதில் மூச்சு பயிற்சிதான் பிரதான அங்கம் வகிக்கிறது.

தூங்குவதற்கு முன்பாக கண்களை மூடி நான்கு வினாடிகள் சுவாசத்தை நன்றாக உள்ளிழுத்துக்கொள்ள வேண்டும். அப்படி உள்ளிழுத்த மூச்சுக் காற்றை சில விநாடிகள் நாசிக்குள் நிறுத்தி வைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின் மூச்சுக் காற்றை சீராக வெளியேற்ற வேண்டும். இதே போன்று மூன்று நான்கு முறை மூச்சு பயிற்சியை தொடர வேண்டும்.

அப்படி செய்யும்போது நிறுத்தி வைக்கப்படும் மூச்சுக்காற்று மூலம் நுரையீரல் முழுவதும் ஆக்ஸிஜன் பரவும். அதன் மூலம் உடல் நெகிழ்ச்சி அடையும். மனதும் அமைதியடையும். அப்போது தேவையில்லாத சிந்தனைகள் தோன்றாது. மனதை குழப்பும் தேவையில்லாத எண்ணங்களும் வெளியேறும். அதன் காரணமாக நிம்மதியான தூக்கத்திற்கு மனம் தயாராகிவிடும் என்பது ஆண்ட்ரூவெய்ஸ் கருத்தாக இருக்கிறது. இது இந்திய மூச்சுப் பயிற்சிக் கலையில் ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகேஷ் அம்பானியிடம் தனது ரகசியத்தை கூறி அசிங்கப்பட்ட ஷாருக்கான்..!!
Next post தலைக்கேறிய மது போதை… கல்லூரி மாணவியின் முகம்சுழிக்கும் காரியம்..!! (வீடியோ)