சிம்புவின் ‘டண்டனக்கா’!

Read Time:1 Minute, 18 Second

சிம்புவின் குறும்புக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. வல்லவன் படத்துக்காக நயன்தாராவின் உதட்டைத் தன் பற்களால் கவ்வி இழுத்து அதைப் போஸ்டராக்கி பரபரப்பு பண்ணியவர், இப்போது தன் குறும்பை டைட்டிலிலேயே காட்டத் தொடங்கிவிட்டார். சிலம்பாட்டம் படத்துக்குப் பிறகு ஜெமினி நிறுவனத்துக்காக ஒரு படம் செய்கிறார் சிம்பு. இந்தப் படத்துக்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் போடா போடி. முழுக்க முழுக்க கனடாவில் எடுக்ப்படவிருக்கும் இந்தப் படத்தின் பெயரை இப்போது திரு போடா திருமதி போடி என மாற்றம் செய்திருக்கிறார் சிம்பு. அதோடு விட்டாரா… டண்டனக்கா கப்பிள் என அந்தத் தலைப்புக்குக் கீழே ஒரு உப தலைப்பையும் கொடுத்திருக்கிறார் சிம்பு. அது சரி… சிம்புவின் அந்த டண்டனக்கா ஜோடி யார்? சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி என்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆர்ட்டிக் பிராந்திய கடல் பனி மிக வேகமாக உருகி வருகிறது விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Next post அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் கருத்துக் கணிப்பில் பாரக் ஒபாமா முன்னிலை