அரண்மனைக்கு வந்தார் குட்டி இளவரசர் ஜப்பான் மக்கள் மலர் தூவி வரவேற்பு

Read Time:2 Minute, 24 Second

Japan.Flag1.jpgஆண்்வாரிசு இல்லாமல் அவதிப்பட்டு வந்த ஜப்பான் மன்னருக்கு இளவரசர் அகிஹிட்டோ மூலமாக ஆண்்வாரிசு கிடைத்துள்ளது. கடந்த வாரம் டோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இளவரசி கிஹோகுக்கு பிறந்த இந்த குட்டி இளவரசர் நேற்று டோக்கியோவில் உள்ள மன்னரின் அரண்மனைக்கு வந்தார். அப்போது ஜப்பான் மக்கள் மலர்தூவி வரவேற்றனர்.

உலகின் மிகவும் பழமையான மன்னர் குடும்பமாக ஜப்பான் மன்னர் குடும்பம் விளங்கி வருகிறது. ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்குமே ஆண் வாரிசு இல்லாமல் இருந்தது. ஜப்பான் மன்னர் குடும்பத்தின் பாரம்பரியத்தின்படி ஆண் வாரிசு ஒருவரே இளவரசராக முடியும். ஆனால் ஆண் வாரிசு இல்லாமல் தவித்த மன்னர் குடும்பத்திற்கு இளவரசி கிகோ தாய்மை பேறு அடைநத போது மகிழ்ச்சி ஏற்பட்டது.

அவர்களின் மகிழ்ச்சிபடியே கடந்த வாரம் இளவவசி கிகோவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து ஜப்பான் மன்னர் குடும்பத்தினரும் மக்களும் மிகுந்த ஆனந்தம் அடைந்தனர். டோக்கியோவில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் இருந்த இந்த குட்டி இளவரசரும் அவரது தாயும் நேற்று மன்னரின் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டனர்..

புதிதாக பிறந்துள்ள குட்டி இளவரசருக்கு ஹிசான்ஹிட்டோ என்று பெயரிடப்பட்டுள்ளது.

குட்டி இளவரசர், அவரது தாயாரும் இளவரசியுமான கிகோ ஆகியோர் காரில் சென்றபோது டோக்கியோ சாலைகளின் இரு புறங்களிலும் திரளான மக்கள் கூடி நின்று தங்களது வருங்கால இளவரசருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ஆனந்த நடனமாடிய ஜப்பான் மக்கள் குட்டி இளவரசருக்கு மலர்தூவி வரவேற்பு கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்கவேண்டும் முஸ்லிம்கள் கோரிக்கை
Next post 10-வது கிரகத்துக்கு எரிஸ் என பெயர் சூட்டப்பட்டது