வியட்நாமில் ‘மிஸ் யுனிவர்ஸ்’

Read Time:3 Minute, 29 Second

வியட்நாம் நாட்டில் நா ட்ராங் நகரில் அடுத்த மாதம் ‘மிஸ் யுனிவர்ஸ்’ (பிரபஞ்ச அழகி) போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக உலக நாடுகளிலிருந்து 81 அழகிகள் வந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் ‘மிஸ் வேர்ல்டு’ (உலக அழகி), ‘மிஸ் யுனிவர்ஸ்’ (பிரபஞ்ச அழகி) போட்டிகள் நடத்தப் படுகின்றன. அடுத்தமாதம் வியட்நாமில் ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்த நாட்டின் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலாத் துறை துணை அமைச்சரும், அழகிப்போட்டி குழு தலைவருமான லீ டென் தோ செய்து வருகிறார். இந்தப்போட்டியில் கலந்து கொள்வதற்காக உலக நாடுகளி லிருந்து 81 அழகிகள் கடந்த வெள்ளியன்று வந்தபோது அவர்களை அமைச்சர் அன்புடன் வரவேற்றார். நா ட்ராங் நகரிலுள்ள டைமண்ட் பே கிரவுன் மாநாட்டு மையத்தில் போட்டி நடைபெறும். இதற்காக அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வருகிற 29-ந் தேதி இங்கு அழகிகள் வருவதாக போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும், கான் ஹோ மாகாண மக்கள் கமிட்டி துணைத் தலைவருமான லீ சுவான் தான் கூறினார். நாளை (செவ்வாய்க் கிழமை) ஹோ பின் அரங்கில் அழகிகளின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் நட்சத்திர ஓட்டலில் அவர்களுக்கு சிறப்பான விருந்து அளிக்கப்படுகிறது. வருகிற 26-ந் தேதி அழகிகள் தலைநகர் ஹனாய்க்கு சென்று தத்தம் நாட்டு தூதர்களையும், வியட்நாம் தலைவர்களையும் சந்திக்கிறார்கள்.அடுத்தமாதம் (ஜூலை) 8-ந் தேதி முதல் மூன்று தினங்களுக்கு போட்டிகள் நடக்கின்றன. அன்றைய தினம் அழகிகளின் அணிவகுப்பு, 13-ம் தேதி ஒத்திகை போட்டி, 14-ந் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்று ‘மிஸ் யுனிவர்ஸ்’ அமைப்பின் துணைத் தலைவர் ராச்சேல் பிரைமர் கூறினார்.

8-ந் தேதியன்று நடைபெறும் போட்டியில் வியட்நாமைச் சேர்ந்த 2 பேர் நீதிபதிகளாக இடம் பெறுவார்கள்; இறுதிப்போட்டியின் போது ஒருவர் இடம் பெறுவார் என்று வியட்நாம் ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் நுகுயேன் காங் கே தெரிவித்தார். இந்த அழகிப்போட்டி நடைபெறும் அரங்கில் 8 ஆயிரம் பேர் அமர்ந்த கண்டு களிக்க இருக்கை வசதி உண்டு. அழகிப்போட்டி செய்தி சேகரிப்பதற்காக உள்ளூர் மற்றும்வெளிநாட்டு பத்திரிக்கை யாளர்கள் அங்கு குவியத் தொடங்கியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாள அரசில் யாருக்கு எந்தப் பதவி?: தலைவர்கள் ஆலோசனை
Next post மட்டக்களப்பில் ஆட்கடத்தல்கள்; ஈ.பி.டி.பி – டி.எம்.வி.பி. பரஸ்பர பழிசுமத்தல்