மட்டக்களப்பில் ஆட்கடத்தல்கள்; ஈ.பி.டி.பி – டி.எம்.வி.பி. பரஸ்பர பழிசுமத்தல்

Read Time:2 Minute, 22 Second

இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்தில் ஈ.பி.டி.பி. கட்சியினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கடத்தல் தொடர்பாக பொலிசார் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாக கடத்தப்பட்ட தேவதாசன் சுரேஷ்குமாரின் உறவினர்கள் கூறுகின்றனர். கடந்த வியாழக்கிழமை மாலை, தனது தாயாரைக் காண்பதற்காக இரு குழந்தைகளின் தந்தையாகிய தேவதாசன் சுரேஷ்குமார் வீட்டிலிருந்து கிளம்பியபோது, வாகனம் ஒன்றில் வந்த ஈ.பி.டி.பி. கட்சியினர் அவரைக் கடத்திச் சென்றதாக தேவதாசனின் மனைவி தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த இருபதாம் தேதியன்று தேவதாசனும் வேறு இரண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களும் ஈ.பி.டி.பி. பிரதேச பிரதிநிதி ஒருவர் சென்ற வாகனத்தின் மீது கல்லெறிந்ததால் அவர்களைப் பிடித்து எச்சரித்து விட்டு விடுவித்து விட்டதாகவும், தற்போது டி.எம்.வி.பி.யினரின் வற்புறுத்தலின் பேரில் தேவதாசனின் மனைவி பொலீசில் பொய் புகார் கொடுத்திருப்பதாகவும் தமிழோசையிடம் பேசிய மட்டக்களப்பு மாநகர சபையின் ஈ.பி.டி.பி. உறுப்பினரான அருமைலிங்கம் தெரிவித்துள்ளார். அதேநேரம் காளியப்பன் குணசீலன் என்ற ஈ.பி.டி.பி. உறுப்பினரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கடந்த இருபதாம் தேதியன்று கடத்திச் சென்றுள்ளதாக அருமைலிங்கம் குற்றம்சாட்டினார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை டி.எம்.வி.பி. சார்பாகப் பேசவல்ல ஆஸாத் மௌலானா மறுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியட்நாமில் ‘மிஸ் யுனிவர்ஸ்’
Next post சிந்திப்பதிலும் ஆண், பெண் வேறுபாடு!