சீனாவில் பெண் போலீசுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கு எதிர்ப்பு

Read Time:1 Minute, 30 Second

சீனாவில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் அனாதையான குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீசாருக்கு அரசாங்கம் பதவி உயர்வு அளித்து இருப்பதற்கு இணையதளத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நல்ல செயல்கள் அடிப்படையில் பதவி உயர்வு கொடுக்கக்கூடாது. தகுதி அடிப்படையில் தான் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஜியாங் ஷியாஜ×வான் என்ற 30 வயது பெண் போலீஸ்காரர் தன் குழந்தையை தன் தாயிடம் விட்டு விட்டு 9 அனாதை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது உள்ளிட்ட நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு போலீஸ் தாய் என்று அழைக்கப்பட்டார். அவருக்கு மாதிரி போலீஸ் அதிகாரி என்ற பட்டம் வழங்கப்பட்டது. அவர் கம்ïனிஸ்டு கட்சியில் சிறப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு மாநில அரசு மக்களின் கருத்தை கேட்டது. அதற்கு பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10 ஆண்டுகளுக்கு பிறகு வளர்த்தவரிடம் திரும்பிய புறா
Next post 5 ஆண்டுகளில் உலக சுற்றுப்பயணம் முடித்து திரும்பிய பாட்டி