`ஆக்ஸிஜன்’ படத்திற்காக நடுக்கடலில் ஆக்ஸிஜனின்றி தவித்த அசோக் செல்வன்..!!
`மெட்ரோ’ படத்தை இயக்கிய அனந்த கிருஷ்ணன் அடுத்ததாக இயக்கும் படம் `ஆக்ஸிஜன்’.
கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில் அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுங்க அதிகாரியாக நடிக்கும் அசோக் செல்வன் நடிக்கும் ஒரு காட்சி, புதுச்சேரி அருகே நடுக்கடலில் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த காட்சியின் போது உயரமாக எழுந்த அலை ஒன்று அசோக் செல்வனை சுருட்டி போட்டிருக்கிறது.
அந்த அலைகளில் சிக்கிக் கொண்ட அசோக் செல்வனுக்கு படக்குழு உதவ முன்வந்த போதிலும், அலைகள் அவரை நிலை குலைய வைத்திருக்கிறது. இவ்வாறாக நடுக்கடலில் அலைகளுக்கு மத்தியில் ஆக்ஸிஜன் இன்றி தவித்திருக்கிறார் நாயகன். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த படத்தில் அசோக் செல்வன் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் முதல் கவரிகை நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. `மெட்ரோ’ படத்தை போல இந்த படத்திலும் நகர வாசிகளின் ஒரு முக்கிய பிரச்சனையை இயக்குநர் கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறது.