புலிகளின் தரிசனம் தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவிப்பு! -இலங்கையின் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை

Read Time:2 Minute, 28 Second

ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பாகும் புலிகளின் “தரிசனம்’ தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நிறுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளையடுத்தே இந்த ஒளிபரப்பை தடை செய்வதாக இஸ்ரேல் அரசாங்கம் “தரிசனம்’ நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளது. தரிசனம் ஒளிபரப்பாகும் மேற்குலக நாடுகளுக்கும் தரிசனத்தை ஒளிபரப்பு செய்யும் இஸ்ரேல் நாட்டிற்கும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பாரிய அழுத்தங்களை கொடுத்ததன் காரணமாக தரிசனம் தொலைக்காட்சிக்கு இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்கிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “சற்லிங” என்ற இஸ்ரேலிய செய்மதி நிறுவனத்து}டாக செயற்பட்டுவந்த இந்த சேவையை இஸ்ரேலிய அரசு தடைசெய்துள்ளது தொடர்பாக சற்லிங் இன் பிரதான முகாமையாளரான டேவிட் ஹொக்னருக்கு இஸ்ரேலிய வெளிவிகார அமைச்சு எழுதியுள்ள கடிதத்தில் புலிகளைப் பயங்கர வாத அமைப்பு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய வெளி நாட்டமைச்சின் தெற்காசியப் பிரிவின் உதவி முகாமையாளரான யரோன் மேர் கையொப்பமிட்டு எழுதியுள்ள இக்கடித்தில், ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் புலிகளின் பிரசாரச் சாதனமாகவும் பணம் சேர்க்கும் ஊடகமாகவும் செயற்படும் தரிசனம் தொலைக்காட்சி தொடர்பாக இலங்கை அரசு தமக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. புலிகள் போன்ற பயங்கர வாத அமைப்புடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய எந்த அமைப்பிற்கும் சேவையை வழங்குவது உரித்தானதல்ல என்று டேவிட் ஹொக்னருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈராக்கில் பெண் தீவிரவாதியின் தற்கொலை தாக்குதலில் 16 பேர் பலி
Next post கட்டுகஸ்தோட்டை ரயில் பாலத்தில் காந்தத்தின் மூலம் பொருத்தப்பட்டிருந்த குண்டு