கட்டுகஸ்தோட்டை ரயில் பாலத்தில் காந்தத்தின் மூலம் பொருத்தப்பட்டிருந்த குண்டு

Read Time:1 Minute, 23 Second

கண்டி கட்டுகஸ்தோட்டை நவயாலத்தென்ன ரயில் பாலத்தின் அடிப் பகுதியில் காந்தத்தின் மூலம் பொருத்தப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த சி. 4 ரக வெடிகுண்டு ஒன்றினை கடந்த சனிக்கிழமை மாலை 5.15 மணியளவில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து; குறிப்பிட்ட ரயில் பாலத்தை அவர்கள் சோதனை செய்தபோது பாலத்தின் அடிப் பகுதியில் காந்தத்தின் மூலம் பொருத்தப்பட்டிருந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது. கண்டி மாத்தளை ரயில் பாதையில் தவயாலதென்ன என்ற இடத்தில் மகாவலி கங்கைக்கு மேலாக அமைந்துள்ள ரயில் பாலத்திலேயே இந்த சக்திவாய்ந்த குண்டு பொருத்தப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் இப்பாலத்தில் குண்டு ஒன்று வெடித்தமையினால் சிறிது சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் தரிசனம் தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவிப்பு! -இலங்கையின் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை
Next post திருமணப் பதிவுக்காக 51 இலங்கை ஜோடிகள் மீண்டும் திருமணம்