வட இலங்கை மோதல்கள்

Read Time:2 Minute, 39 Second

இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் போர்முனைப் பிரதேசங்களில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் முன்னணி காவலரண்கள் மீது ஞாயிறன்று மேற்கொண்ட தாக்குதல்களையடுத்து இடம்பெற்ற மோதல்களில் 33 விடுதலைப் புலிகளும், 5 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. இராணுவச் சிப்பாய் ஒருவரைக் காணவில்லை என்றும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது. கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 7 சடலங்கள் கைப்பற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது. இதேவேளை, வவுனியா பாலமோட்டை பகுதியில் ஞாயிறு காலை 3 முனைகளில் தமது பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இந்தச் சண்டைகளின்போது 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர். இராணுவத்தினரின் 3 சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் தம்மால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். நல்ல நிலையில் இருந்த ஒரு சடலம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதேவேளை, இராணுவத்தினரால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட 7 விடுதலைப் புலிகளின் சடலங்களை இன்று பிற்பகல் புளியங்குளம் சோதனைச்சாவடியில் விடுதலைப் புலிகளிடம் தாங்கள் கையளித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளிடம் இருந்து பெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளி தாக்கியதை தொடர்ந்து கப்பல் கவிழ்ந்து 4 பேர் பலி
Next post ஆப்கன் குண்டு வெடிப்பில் 4 யு.எஸ். வீரர்கள் பலி