சாமி-2 படம் குறித்து பரவும் வதந்தி – கீர்த்தி சுரேஷ் மறுப்பு..!!
கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி….
“நான் ‘சாமி-2’ படத்துக்கு கூடுதலாக சம்பளம் கேட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. வழக்கமாக வாங்கும் சம்பளத்தை தான் கேட்டேன். இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் ஹரி என்னிடம் கூறிய போது, ‘சாமி-2’ படத்தில் திரிஷா இருக்கிறாரா? என்று தான் முதலில் கேட்டேன். ஏன் அவர் நடிக்கவில்லை என்பது எனக்குத் தெரியாது.
இது தவிர ‘சண்டக்கோழி-2’ படத்தில் நடிக்கிறேன். இதன் கதையை கேட்டதும் பிடித்துவிட்டது. உடனே அதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இது தேசிய விருது பெற்ற மீரா ஜாஸ்மின் நடித்த கதாபாத்திரம். அதில் நடிப்பது பெரிய விஷயம்.
நான் நடித்துள்ள ‘அஞ்ஞாதவாசி’ தெலுங்கு பட இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. இதற்கு சேலை கட்டி, கொண்டை போட்டு வித்தியாசமான தோற்றத்தில் வந்தேன். ஆனால் அதை சிலர் கிண்டல் செய்து விமர்சித்தனர். இது மிகவும் வருத்தம் அளித்தது”.