முக்கிய படையணித் தலைவர்களை தொடர்ந்து இழந்து வரும் புலிகள் இயக்கம்!

Read Time:5 Minute, 49 Second

கடந்த இரண்டு வருட காலப் பகுதிக்குள் புலிகள் அமைப்பு முக்கிய படையணிகளை வழி நடத்தி வந்த பல தலைவர்களை இழந்துவிட்ட நிலையிலும் இதன் காரணமாக புலிகள் இயக்கத்தினரின் தாக்குதல் சக்தி வெகுவாகக் கீழடைந்துள்ள நிலையிலும் தற்போது புலிகள் அமைப்பின் பிரபல படையணி ஒன்றின் தலைவராக இருந்து முக்கிய களமுனைகளில் பங்குபற்றிய மற்றுமொரு தலைவரையும் இழந்துள்ளது. புலிகள் இயக்கத்தின் படையணிகளில் முக்கியமானதும் நீண்டகாலமாக பல்வேறு பிரதான போர்முனைகளில் பங்குபற்றியதுமான இம்ரான் பாண்டியன் எனப்படும் படையணியின் தலைவராகிய லெப்டினன் கேர்ணல் றெஜிதன் என்னும் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியே இவ்வாறு ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். எவ்வாறாயினும் இவர் எங்கே எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற தகவல்களை புலிகள் இயக்கம் விபரமாக வெளியிடாமல் மறைத்தே வைத்துள்ளது. போரிலோ அல்லது வேறு எந்தக் குண்டுவெடிப்புகள், தாக்குதல்கள் சம்பவங்களின் போது புலிகள் தரப்பில் கொல்லப்பட்ட உறுப்பினர் முக்கிய நபர் என்றால் அவருடைய மரணச்சடங்கில் இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் தோன்றுவார்கள். ஆனால், ஏனைய சாதாரண புலிகள் இயக்க உறுப்பினர்களின் மரணச் சடங்குகள் பெரிய எடுப்பில் நடத்தப்படுவதில்லை. எனவே, இறந்த ஒரு புலிகள் அமைப்பின் நபர் இயக்கத்தில் முக்கிய தளபதியா? அல்லது முக்கியஸ்தரா? என்பதை அவருக்காக நடத்தப்படும் மரணச் சடங்குகளிலிருந்தே அறியலாம். இவ்வாறே முக்கிய தளபதியாகிய றெஜிதனின் மரணச் சடங்குகள் கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் பெரிய ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சடங்கில் புலிகள் அமைப்பின் ஏனைய முக்கிய தலைவர்களும் தோன்றி றெஜிதனின் பூதவுடலுக்கு தமது இறுதி மரியாதையைச் செலுத்தியுள்ளனர். இவர்களில் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவின் தலைவர் சூசை, இம்ரான் பாண்டியன் படையணியின் விசேட தலைவர் வேலவன், கேர்ணல் ஆதவன், கேர்ணல் தீபன் ஆகிய முக்கிய தலைவர்களும் அடங்குவர். புலிகள் இயக்கத்தில் தற்போது உயிருடனிருக்கும் ஆயுதப்படைத் தலைவர்களில் மேற்படி தலைவர்களே முன்னணியில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த றெஜிதன் மேற்குறிப்பிட்ட இம்ரான் பாண்டியன் படையணித் தலைவராக இருப்பதுடன் ஏனைய முக்கிய மூன்று படையணிகளின் தலைவராகவும் செயற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட தகவல்களுக்கேற்ப புலிகள் இயக்கத்தின் கனரக ஆயுதப் பிரிவு, விமான அழிப்புப் பிரிவு, கடல்வழியாக தரையில் ஊடுருவும் தாக்குதல் பிரிவு ஆகிய ஏனைய பிரதான தாக்குதல் படைப்பிரிவுகளினதும் தலைவராக றெஜிதன் செயற்பட்டு வந்துள்ளார்.

இந்த வகையில் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களின் போது புலிகளின் விமான அழிப்புப் பிரிவின் தலைவராக இருந்த றெஜிதனே மேற்படி தாக்குதல்களைத் தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

மேலும், றெஜிதன் கனரக ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட விசேட நிபுணராக இருந்தார் எனவும் கடந்த 20 வருடங்களாக புலிகள் இயக்கத் தலைவருடன் கூடுதல் நெருக்கத்துடன் பழகிவந்தார் எனவும் முக்கியமாக பல்வேறு யுத்தத் திட்டங்கள் சம்பந்தமாக பிரபாகரனும் றெஜிதனும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புலிகள் இயக்கத்தில் நான்கு படைப்பிரிவுகளின் தலைவராக இருந்தவர் எனக் கூறப்படும் இம்ரான் பாண்டியன் படையணியின் தலைவர் றெஜிதன் கொல்லப்பட்டதைப் பற்றிய தகவல்களை புலிகள் இயக்கம் மறைத்து விட்டாலும் பாதுகாப்புப் படையின் புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருக்கும் தகவல்களில் றெஜிதன் இராணுவத்தினரின் தாக்குதலிலேயே கொல்லப்பட்டதாகவும் இந்தத் தகவல் தற்போது உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கியூபா அரசில் பிளவு இல்லை:பிடல் காஸ்ட்ரோ
Next post ஐக்கிய தேசிய கட்சி மீது புலிமுத்திரை குத்தி அனைத்துப் பிரச்சினைக்கும் யுத்தத்தை காரணம் காட்ட அரசு முயற்சி -திஸ்ஸ அத்தநாயக்கா விசனம்