உங்கள் சருமத்திற்கு மின்னும் அழகைக் கொடுக்கும் தேன்..!!

Read Time:4 Minute, 2 Second

தேனில் எண்ணற்ற உடல்நல நன்மைகள் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் இந்த அற்புத அமுதம் சருமத்திலும் பல மாயங்களைச் செய்ய வல்லது! அதனால்தான், சருமப் பராமரிப்புத் தயாரிப்புகள் பலவற்றிலும் தேன் ஒரு மூலப்பொருளாக உள்ளது.

மின்னும் அழகு சருமத்தைப் பெற தேன் எப்படியெல்லாம் உதவுகிறது எனப் பார்ப்போம்:

1. முகப்பருக்களைப் போக்க: தேன் அழற்சி எதிர்ப்புப் பண்புகளும் பாக்டீரிய எதிர்ப்புப் பண்புகளும் கொண்டது, அது வடுக்களின் தோற்றத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் சருமத்தின் கருமையைப் போக்கி, திசுக்கள் பழுதுகளைச் சரிசெய்துகொள்ளவும், திசுக்கள் மீண்டும் உருவாவதற்கும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை: முகம் முழுவதும் தேனைப் பூசிக் கொள்ளவும், வட்ட வடிவத்தில் அசைத்தபடி பூச வேண்டும் அல்லது பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் பூசவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு, நன்றாகக் கழுவ வேண்டும்.

2. தேன் குளியல்: தேனின் குணப்படுத்தும் திறனால் ஆக்சிஜனேற்றப் பொருள்கள் மற்றும் சுற்றுச்சூழலால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமம் பாதுகாக்கப்படுகிறது. அது சருமத்திற்கு ஈரப்பதமூட்டி, மென்மையான பொலிவைத் தருகிறது.

பயன்படுத்தும் முறை: ஒரு மக் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேனைச் சேர்க்கவும், பிறகு இந்தக் கலவையை நீங்கள் குளிக்கும் நீரில் சேர்க்கவும்.

3. இளமையைப் பாதுகாக்கிறது: ஆன்டிஆக்சிடண்டுகள் அதிகமுள்ளதால், தேன் முதுமையடையும் செயல்முறையை மெதுவாக்குகிறது. தேன் ஈரப்பதத்தை சருமத்திலேயே தக்கவைப்பதால் சருமம் எப்போதும் நீர்ச்சத்துடன் இருக்கிறது.

பயன்படுத்தும் முறை: இரண்டு டேபிள்ஸ்பூன் தேனையும் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றையும் கலந்தது, அந்தப் பசியை பஞ்சுருண்டை கொண்டு முகத்தில் பூசவும். அது முகத்தில் உறிஞ்சிக்கொள்ளப்படும் வரை காத்திருந்து, பிறகு கழுவவும்.

4. கரு வளையங்கள்: தேன் கருமையைப் போக்கும் பண்பு கொண்டது. தேனை கண்களைச் சுற்றி பூசினால் கருவளையங்களும் கரும்பகுதிகளும் மறையும் என்று கருதப்படுகிறது.

பயன்படுத்தும் முறை: தேனையும் பாதாம் எண்ணெயையும் சம அளவில் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை உங்கள் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பூசிக்கொண்டு 10 நிமிடம் விட்டு பிறகு கழுவவும்.

5. நுண்துளைகளை சிறிதாக்குகிறது: அசல் தேன், டோனிங் பண்புகள் கொண்டுள்ளது. இது அளவுக்கு அதிகமான சீபம் உற்பத்தியாவதைக் குறைக்கிறது. இது தோலில் உள்ள நுண்துளைகளை சிறிதாக்குவதாகக் கருதப்படுகிறது.

பயன்படுத்தும் முறை: தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு (அல்லது மில்க் கிரீம்) கலந்த கலவையை முகத்தில் பூசி, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 40 வயது தம்பதிகளுக்கான தாம்பத்திய அறிவுரை..!!
Next post படம் எடுப்பதை விட கட்சி ஆரம்பிப்பது சுலபம்: கமல், ரஜினி பட இயக்குனர்…!!