சிக்கிம் மாநிலத்துக்கு தூதராவதில் பெருமை – ஏ.ஆர்.ரகுமான்…!!

Read Time:1 Minute, 38 Second

சகிப்புத்தன்மை, ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு உதாரணமாக திகழும் சிக்கிம் மாநிலத்தின் தூதர் பணியை நான் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியிருக்கிறார்.

சிக்கிம் மாநில தலைநகரான காங்டாக்கில் அந்த மாநில அரசு சார்பில் குளிர்கால திருவிழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார். விழாவுக்கு தலைமை தாங்கிய சிக்கிம் மாநில முதல்-மந்திரி பவன்குமார் சாம்லிங், ‘ஏ.ஆர்.ரகுமான் சிக்கிம் மாநில விளம்பர தூதராக பணியாற்ற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

“சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு உதாரணமாக திகழ்கிறது. எனக்கு முக்கியத்துவம் அளித்து என்னை கவுரவிக்கும் விதமாக அளித்த தூதர் பணியை நான் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறேன். அதை சிறப்புடன் செய்வேன்” என்றார்.

இதன்மூலம், ஏ.ஆர்.ரகுமானுக்கு அந்த மாநிலத்தின் மந்திரிகளுக்கு உரிய அனைத்து அந்தஸ்தும் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு விட்டமின் – ஈ எண்ணெய்..!!
Next post நாச்சியார் படத்துக்கு தேதி குறித்த பாலா…!!