விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் அவர்களுடன் சேர்ந்து செயல் படுவதில் அரசுக்கு தயக்கம் கிடையாது என்று இலங்கை அதிபர் வலியுறுத்தல்

Read Time:1 Minute, 41 Second

நாட்டின் பாதுகாப்பே முக்கியம். எனவே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் அவர்களுடன் சேர்ந்து செயல் படுவதில் அரசுக்கு தயக்கம் கிடையாது என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் ராஜபக்சேவை மத பிரமுகர்கள் சந்தித்து பேசினர். அப்போது அவர்களிடையே ராஜபக்சே நிகழ்த்திய உரை வருமாறு: சொந்த மண்ணில் சொந்த மக்களுக்கு எதிராக போர் புரிய வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் அல்ல. அதே சமயம் நாட்டின் பாதுகாப்பையும், மக்களின் பாதுகாப்பையும் எக்காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது. நாட்டை பயங்கரவாதியிடம் அல்லது பயங்கரவாத அமைப்பிடம் ஒப்படைக்க முடியாது. விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட தயாராக இருக்கும் பட்சத்தில் அவர்களோடு சேர்ந்து செயல்பட என்னுடைய அரசுக்கு தயக்கம் கிடையாது என்றார் ராஜபக்சே. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண அமைக்கப்படும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவில் மத மற்றும் அரசியல் தலைவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிபருக்கு இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூங்கிப் போன பைலட்டுகள் -தப்பிய 100 பயணிகள்
Next post நடிகர் ரஞ்சன் ராமநாயக்கா ஐ.தே.க சார்பில் களமிறங்குகிறார்