பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி முன்னிலையில் இஸ்ரேல் காவலர் தற்கொலை

Read Time:1 Minute, 36 Second

இஸ்ரேலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி முன்னிலையில் இஸ்ரேல் காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் காரணமாக பென்குரியான் விமான நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. தனது மனைவி கார்லா புரூனியுடன் இஸ்ரேலில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சர்கோசி, நேற்று அங்கிருந்து புறப்படுவதற்காக விமான நிலையத்திற்கு வந்தார். அவரை வழியனுப்பி வைப்பதற்காக இஸ்ரேல் பிரதமர் இகுத் ஓல்மார்ட் உடன் வந்திருந்தார். வழியனுப்பு விழாவையொட்டி ராணுவ படையினரின் வாத்திய இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது, காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அதிகாரிகள் சர்கோசி மற்றும் அவரதுமனைவியை அவசர அவசரமாக விமானத்தில் ஏற்றி இஸ்ரேல் பிரதமரையும் அவரது காருக்கு அழைத்து சென்று விட்டனர். இச்சம்பவம் காரணமாக இஸ்ரேலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவில் கிட்னி மோசடி: 3 கிரேக்க பெண்கள் கைது
Next post முதலமைச்சர் வேட்பாளர்களை நேற்று வெளியிட்டுள்ளது ஜே.வி.பி