தணிக்கை குழு அனுமதி அளித்தும் பத்மாவத் படத்திற்கு 5 மாநிலங்களில் தடை..!!

Read Time:2 Minute, 13 Second

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `பத்மாவத்’. சித்தூர் ராணி பத்மாவதியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் படத்தின் தலைப்பு ‘பத்மாவத்’ என மாற்றம் செய்யப்பட்டும், சில காட்சிகள் நீக்கப்பட்டும், கனவு பாடல் காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து படத்தின் தணிக்கை குழு ‘யு/ஏ’ என அனைவரும் பார்க்கும் வகையிலான சான்றிதழ் அளித்து அனுமதி வழங்கப்பட்டது. மேலும் படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக தடைகள் அனைத்தும் நீங்கி படத்தை வெளியிடுவதில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

நாடு முழுவதும் ரிலீசாகும் என்றும், இந்திய தவிர்த்து 60 நாடுகளில் படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தணிக்கை குழு அனுமதி அளித்தும், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலத்தில் படத்திற்கு போலீஸ் தரப்பில் தடை கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலத்திலும் படம் வெளியாகாது என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.

பீகாரிலும் படத்தை தடை செய்வது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னணியின் முக்கியமான மாற்றம்..!! (கட்டுரை)
Next post கல்லூரி மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட சுஸ்மிதா சென்…!!(வீடியோ)