தென் ஆப்பிரிக்காவில் மர்ம நோய்க்கு 60 பேர் பலி…!!

Read Time:2 Minute, 8 Second

தென் ஆப்பிரிக்காவில் லிஸ்டீரியோசிஸ் அல்லது லிஸ்டீரியா என்ற மர்ம நோய் தாக்கியதில் 60 பேர் பலியாகி உள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் மர்ம நோய்க்கு 60 பேர் பலி
நியூயார்க்:

தென் ஆப்பிரிக்காவில் லிஸ்டீரியோசிஸ் அல்லது லிஸ்டீரியா என்று அழைக்கப்படுகிற மர்ம நோய், மனிதர்களை தாக்கி வருகிறது.

இந்த நோய்க்கு அங்கு 60 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 750 பேருக்கு இந்த நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவல்களை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்து உள்ளது.இந்த நோய்க்கு காரணமான பாக்டீரியா, மண், தண்ணீர், பால்பண்ணை பொருட் கள், கடல் உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றில் இருப்பது தெரிய வந்து உள்ளது.சின்னஞ்சிறு குழந்தைகள்தான், பெரும்பாலும் இந்த நோயின் இலக்காக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் லின்ட்மீயிர் தெரிவித்து உள்ளார்.இந்த நோய் தாக்கியவர்களில் 40 சதவீதத்தினர் குழந்தைகள் தான் என்றும் அவர் கூறி உள்ளார்.

லிஸ்டீரியோசிஸ் கடுமையான நோய் என்றபோதிலும்கூட, அது தடுக்கக்கூடியது, குணப்படுத்தக்கூடியதுதான் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில், “இந்த நோய் மிகப்பெரிய சவாலாக அமைந்து உள்ளது. இது சுகாதாரத்துறையில் மட்டுமல்லாது எல்லா துறைகளையும் உள்ளடக்கியது” என்றும் கிறிஸ்டியன் லின்ட்மீயிர் கூறி உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு…!!
Next post மெர்சல் படத்தில் அவசியம் கருதியே சர்ச்சை வசனங்களை பேசினேன்: நடிகர் விஜய் பேச்சு…!!