கொழும்பில் புலிகளை மறைத்து வைத்திருந்த சிங்களப் பெண்

Read Time:8 Minute, 36 Second

கொழும்பு பிரதேசத்திலும் மற்றும் ஜனநெருக்கடி மிகுந்த புறநகர்ப் பகுதிகள் உட்பட கொழும்பை அண்டிய பிரதேசங்களிலும் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களை நடத்துவதற்காக அப்பகுதிகளுக்கு வருகின்ற புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்குச் சிங்கள இனத்தவர்களும் பல்வேறு உதவிகளைச் செய்த சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அண்மைக் காலங்களில் வெளியாகி வந்துள்ளன. அத்துடன், அவ்வாறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்காக வந்த புலிகள் இயக்கத்தினருக்கு உதவிசெய்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சிங்கள இனத்தவர்களும் அண்மைக் காலங்களில் சம்பந்தப்பட்ட பிரதேசப் பொலிஸாரினாலும் மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, புலனாய்வுப் பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு மேற்படி சிங்கள இனத்தவர்கள் தாக்குதல்களுக்காக வரும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்குத் தங்குமிடவசதிகளைச் செய்து கொடுத்தது, தாக்குதல்களுக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்கியது, புலிகள் இயக்கத்தினர் தெற்குப் பிரதேசங்களில் தங்குவதற்காக அடையாள அட்டைகள் முதலிய பத்திரங்களைப் பெற்றுக்கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இந்தவிதமாக புலிகள் இயக்கத்தினருக்குச் சிங்கள இனத்தவர்கள் உதவி வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களின் தொடர்ச்சியாக அண்மையில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்தவந்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததாகவும் உதவிகளை வழங்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பெயரில் சிங்களப் பெண் ஒருவரை விசேட பொலிஸ் குழுவினர் கொழும்புக்கு அண்மையிலுள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். இந்தப் பெண் அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் எனவும் தாக்குதல்களுக்காக கொழும்புக்குள் நுழையவந்த சில புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்குத் தங்குமிட வசதி உட்பட ஏனைய வசதிகளை இவர் செய்துகொடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவருடன் சேர்ந்து புலிகள் இயக்க ஆதரவாளராகிய தமிழர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர் இவ்வாறு கொழும்பு நோக்கி வந்த, குறிப்பிட்ட புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு அவர்கள் பாதுகாப்பு கெடுபிடிக்குள் உள்ளாகாமல் தப்புவதற்கு ஏதுவாகவும் அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு ஏதுவாகவும், அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள், வீசா அனுமதிப் பத்திரங்கள் பதிவுகளைப் பெற்றுக்கொடுத்திருப்பதாகவும், தெரியவந்துள்ளதாகவும், இந்தக் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் மேற்படி விசேட பொலிஸ் குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சிங்களப் பெண் மற்றும் தமிழ் நபர் ஆகிய இருவரையும் கொழும்பை அண்டிய பிரதேசத்தில் வைத்தே பொலிஸார் பிடித்துள்ளனர். கொழும்பில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட இரண்டு புலிகள் இயக்கப் பிரபல நபர்களை குறித்த பொலிஸ் பிரிவினர் கைது செய்திருந்ததாகவும் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போதே மேற்படி சிங்களப் பெண் மற்றும் தமிழர் பற்றிய தகவல்களை அவர்கள் வெளியிட்டனர் எனவும் இதைத் தொடர்ந்து அந்தத் தகவல்களின் அடிப்படையில் குறித்த இடத்தில் தேடுதலை மேற்கொண்டு மேற்படி சிங்களப் பெண்ணையும் புலிகள் இயக்க ஆதரவாளரையும் கைதுசெய்ததாக மேலும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தகவல்களை வெளியிட்ட குறித்த இரண்டு பிரபல புலிகள் இயக்கத்தினரில் ஒருவர் மேற்படி அரச சார்பற்ற நிறுவனத்தில் சேவை செய்யும் பெண் பணியாளருக்குச் சொந்தமான கொழும்புக்கு அண்மையிலுள்ள வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார் எனச் சம்பந்தப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், இவ்வாறு கொழும்புக்கு வந்த புலிகள் இயக்கத்தினர் வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டு, வீசா அனுமதி ஆகியவற்றை பெற்றுக்கொடுத்த குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்க ஆதரவாளர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் கடந்த சுமார் 25 வருடங்களாக கொழும்பில் வசித்துவந்துள்ளார் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு தெற்கு வரும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளை கொழும்பிலுள்ள குறிப்பிட்டதொரு இயக்கப் பிரதிநிதியிடம் அல்லது ஆதரவாளரிடம் கொழும்பில் செயற்படும் புலிகள் இயக்கத் தொடர்பாளர்களே ஒப்படைத்து அவர்களுக்கு மேற்படியான தங்குமிட வசதிகள், பிரயாணப் பத்திரங்களைப் பெற்றுக்கொடுக்குமாறு கூறியுள்ளதாகவும் இந்தத் தகவல்களின் பிரகாரம் இரண்டு முக்கிய புலிகள் இயக்கத் தொடர்பாளர்களைக் கைதுசெய்வதற்காக தீவிர விசாரணை மற்றும் தேடுதல்களை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேற்படி அரசு சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த சிங்களப் பெண் மற்றும் தமிழ் நபரைக் கைது செய்வதற்கான தகவல்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இரண்டு பிரபல புலிகள் இயக்கத்தினரிடமே பெறப்பட்டதுபோலவே, கொழும்பு வரும் புலிகளுக்காக உதவிகளை வழங்கும்படி தெரிவித்த குறித்த இரண்டு புலிகள் இயக்கத் தொடர்பாளர் பற்றிய தகவல்களை மேற்படி சிங்களப் பெண் மற்றும் தமிழ் நபரிடம் பெறுவதற்காக பொலிஸ் தரப்பில் அவர்களிடம் விசாரணைகள் தொடரப்பட்டு வருவதாகவும் அந்தத் தகவல்களும் விரைவில் தெரியவரும் என நம்புவதாகவும் பொலிஸ் தரப்பு மேலும் கூறியுள்ளது. விசாரணைகளுக்காகத் தடுத்துவைக்கும் உத்தரவின் கீழ் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக மேலும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எவ்வித அர்த்தங்களையும் இந்தியா பிரயோகிக்கவில்லை அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்து உள்ளார்
Next post சிறுமிகளை வைத்து விபசாரம்: அமெரிக்காவில் நடந்த அதிரடி வேட்டையில் 300 பேர் கைது