பப்புவா நியூகினி தீவில் வெடித்து சிதறும் எரிமலை: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்…!!

Read Time:2 Minute, 30 Second

ஒசானியாவில் அமைந்துள்ள பப்புவா நியூகினி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள எரிமலை வெடித்து சிதறி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பப்புவா நியூகினி தீவில் வெடித்து சிதறும் எரிமலை: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
சிட்னி:

ஒசானியாவில் அமைந்துள்ள பப்புவா நியூகினி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள எரிமலை வெடித்து சிதறி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஒசானியா கண்டத்தில் அமைந்துள்ளது பப்புவா நியூகினி தீவு. இதனருகில் உள்ள கடோவர் தீவிலுள்ள எரிமலை கடந்த 5-ம் தேதி முதல் குமுறி கொண்டிருந்தது.

இதற்கிடையே, அந்த எரிமலை நேற்று முன்தினம் வெடிக்க ஆரம்பித்தது. அந்த எரிமலையில் இருந்து தீப்பிழம்புகள் வெளிப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எரிமலை வெடிப்பில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அந்த தீவில் உள்ள ஆயிரக்கணக்கானோரை மீட்டு, பத்திரமான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

வெளியேற்றப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து வருகிறது.

மேலும், அவர்களுக்கு உணவு, உடை, தண்ணீர், தற்காலிகத் தங்குமிடம் ஆகியன அவசர தேவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஆஸ்திரேலிய வெளியுறவு துறை மந்திரி ஜுலி பிஷப் டுவிட்டரில் பதிவிடுகையில், எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தற்போதைய நிலை என்ன?…!!
Next post முன்னுரிமை தளபதிக்கு தான் – ஓவியா ஓபன்டாக் …!!