பிரிட்டனில் வசிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவராவது விசா முடிந்த பின்னரும் தங்கியிருந்தால் 14 வருட சிறை

Read Time:2 Minute, 7 Second

பிரிட்டனில் வசிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவராவது குறுகியகால விசாபெற்று அங்கு சென்றுவிட்டு விசா முடிந்த பின்னரும் தங்கியிருந்தால் அங்கு வசிப்பவர்களே பொறுப்பென பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது. 2009 இலிருந்து இந்த நடைமுறை அமுலுக்கு வரும். குடும்ப உறுப்பினர்கள் பிரிட்டனுக்கு சென்று விசாகாலம் முடிந்த பின்னர் தங்கியிருந்தாலோ அல்லது சட்ட விதிகளை மீறினாலோ அவர்களுக்கு உத்தரவாத அனுசரணை வழங்கிய பிரிட்டிஷ் பிராஜாவுரிமை பெற்றவரோ அல்லது வதிவிட உரிமை பெற்றவரோ பொறுப்பாளிகளாகும். இது குடும்ப விருந்தினர் வகைத் திட்டத்தில் அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸ் அபராதம் மற்றும் 14 வருட சிறைத்தண்டனையை பொறுப்பு நின்ற குடும்ப உறுப்பினர் அனுபவிக்க வேண்டும். விசா பெறுவதற்கும் விருந்தினர் தங்கியிருப்பதற்குமான அனுசரணையாளராக பிரிட்டனிலுள்ள அவர்களின் குடும்ப உறுப்பினர்களே இருப்பார்கள். அனுசரணையாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும் விசா நிபந்தனைகளை விருந்தினர்கள் மீறினால் இந்த அடையாள அட்டையை வைத்திருக்கும் அனுசரணையாளர் மீதே சட்டநடவடிக்கை எடுக்கப்படும். உரிய விசா காலத்துக்கு முன்னர் தனது உறவினர் பிரிட்டனில் தங்கியிருக்க மாட்டார் என்பதை இந்த அனுசரணையாளர் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெர்மனியை வீழ்த்தி சாம்பியனானது ஸ்பெயின்
Next post தினந்தோறும் கிளாமர் படங்கள்..