அதிபர் மட்டுமே போட்டியிட்ட ஜிம்பாப்வே அதிபர் தேர்தலை உலக நாடுகள் நிராகரித்தன

Read Time:1 Minute, 15 Second

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் கடந்த மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. 28 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் ராபர்ட் முகாபே மீண்டும் போட்டியிட்டார். அதில் எதிர்க்கட்சி தலைவர் மோர்கன் வாங்கிரை அதிக ஓட்டுகள் பெற்றார். ஆனால் மெஜாரிட்டி ஓட்டு கிடைக்காததால், இரண்டாவது சுற்று தேர்தல் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அதிபரின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், மோர்கன் வாங்கிரை இத்தேர்தலில் போட்டியிடவில்லை. அதிபர் ராபர்ட் முகாபே மட்டும் போட்டியிட்டார். அதனால் அவர் வெற்றி உறுதி என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த தேர்தலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், ஜப்பானில் நடந்து வரும் ஜி-8 நாடுகள் மாநாட்டில் இத்தேர்தல் சட்ட விரோதமானது என்று உலக தலைவர்கள் நிராகரித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் சண்டை: 47 விடுதலைப் புலிகள் பலி; பயிற்சி முகாம் செயல்பட்டு வந்த கிராமத்தை ராணுவம் கைப்பற்றியது
Next post சர்வதேச ஜனநாயக சங்கத்தின் உபதலைவர் மற்றும் ஆசிய பசுபிக் ஜனநாயக சங்கத்தின் தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஐ.தே.கட்சி தலைவர் நியமனம்