சர்வதேச ஜனநாயக சங்கத்தின் உபதலைவர் மற்றும் ஆசிய பசுபிக் ஜனநாயக சங்கத்தின் தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஐ.தே.கட்சி தலைவர் நியமனம்
Read Time:1 Minute, 8 Second
சர்வதேச ஜனநாயக சங்கத்தின் உபதலைவர் மற்றும் ஆசிய பசுபிக் ஜனநாயக சங்கத்தின் தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பரீசில் நடைபெற்ற சர்வதேச ஜனநாயக சங்கத்தின் 25வது வருடாந்தக் கூட்டத்தின்போதே எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளது. சிம்பாவே, இலங்கை, பெலாரஸ் ஆகிய நாடுகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை நீக்குவதற்கு அந்த நாடுகளின் அரசாங்கங்கள் இதனைவிட செயல் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தும் பிரேரணையொன்றும் இந்த கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்டது.
Average Rating