பிரியங்கா சோப்ரா பாவனாவுக்கு கடிதம்!!
Read Time:1 Minute, 16 Second
சித்திரம் பேசுதடி, தீபாவளி, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பாவனா. இவருக்கும் தயாரிப்பாளரும், காதலருமான நவீனுக்கும் நேற்று கேரளாவில் திருமணம் நடந்தது. திருமணத்தில் பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, பாவனாவுக்கு பாராட்டு கடிதமும், வாழ்த்து கடிதமும் அனுப்பியிருந்தார்.
‘உங்களது திருமணத்துக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். இது உங்கள் வாழ்வில் பெரிய முன்னேற்றம். கொடூரத்தை கண்டு எதிர்த்து போராடும் துணிச்சல் மிக்கவர் நீங்கள். தைரியம் மற்றும் ஆச்சரியப்படத்தக்க பெண். உங்களை பெரிதும் போற்றுகிறேன். எந்நேரமும் உங்கள் மீது அன்புடன் இருக்கும் தோழி’ என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
Average Rating