800 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
தம்பலகமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 800 மில்லிகிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த நபரொருவரை நேற்று (29) மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஈச்சம்தீவு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் கேரளா கஞ்சா விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டபோதே 800 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபருக்கெதிராக கஞ்சா வைத்திருந்த வழக்குகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இன்று (30) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.