மெழுகுதிரி கம்பெனியில் மியா பயிற்சி!!
அமரகாவியம், நேற்று இன்று நாளை, எமன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார் மியா ஜார்ஜ். மலையாள நடிகையான இவர், அடுத்து எண்டே மெழுதிரி அழுதங்கள் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். கதைப்படி மெழுகுவர்த்தி தயாரிப்பில் ஈடுபடும் பெண்ணாக நடிக்கிறார். தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக மெழுகுதிரி தயாரிக்கும் கம்பெனியில் 1 வாரம் பயிற்சி பெறுகிறார். படத்தின் ஷூட்டிங் முழுவதும் ஊட்டியில் நடைபெற உள்ளது. கதாசிரியரும் நடிகருமான அனுப் மேனன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். படத்திலும் நடிக்கிறார்.