மணிரத்னம் படத்தில் குவியும் நட்சத்திர பட்டாளங்கள்!!

Read Time:1 Minute, 37 Second

விஜய்சேதுபதி, பஹத் பாசில், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். இப்படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பில் மணிரத்னத்துடன் பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க உள்ளது.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தை 350 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் மேலும் சில நட்சத்திரங்கள் படத்தில் இணைய உள்ளனர்.

ஒருவர் மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்றுவெளியிடை’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகையான அதிதி ராவ் ஹைத்ரி. இன்னொருவர் மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் நடித்த ஆண்டனி வர்கீஸ். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெழுகுதிரி கம்பெனியில் மியா பயிற்சி!!
Next post சரித்திர கதையில் இனி நடிக்க மாட்டேன் : தீபிகா திடீர் முடிவு!!