குண்டு உடம்பு ஒல்லியான ரகசியம்… நடிகை ராசி கண்ணாவுக்கு ஆபரேஷன்?
தமிழில் சைத்தான் கா பச்சா, இமைக்கா நொடிகள், அடங்க மறு படங்களில் நடித்து வருகிறார் ராசி கண்ணா. இவர் தெலுங்கில் சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறார். சற்று பூசினாற்போன்ற தோற்றம் கொண்டவர் ராசி. விமர்சனங்களில் அவரது தோற்றத்தை பற்றி நக்கல் செய்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ராசி கண்ணா தனது புதிய தோற்றத்தை படம் பிடித்து இணைய தளத்தில் பரவவிட்டார். அதில் முற்றிலுமாக உடல் எடை குறைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறியிருந்தார்.
கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் தான் அவரால் உடல் இளைக்க முடிந்தது என்று பேசப்பட்டது. இதுகுறித்து ராசிகண்ணா கூறும் போது,’என்னை ஒரு நடிகையாகவே பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் நான் நடிக்கும் படங்களில் என்னைப்பற்றி வரும் விமர்சனம் எனது நடிப்பு திறமையைபற்றி அலசாமல் எனது உடல் எடை மற்றும் தோற்றம் பற்றியே விமர்சித்து வந்தனர்.
அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணி னேன். இதையடுத்து முதலில் என் உணவு பழக்கத்தை மாற்றினேன். அதன்பிறகு தொடர்ச்சியாக ஜிம்மிற்கு சென்று பயிற்சி செய்தேன். மணிக்கணக்கில் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டேன். இறுதியாக எனது கூடுதல் வெயிட்டை குறைத்து ஸ்லிம்மாக மாறினேன்.
லிபோசக்ஷன் (கொழுப்பு நீக்க சிகிச்சை) அல்லது வேறு அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தீர்களா என்று சிலர் கேட்கின்றனர். உடல் எடை குறைய குறைய தொடர்ச்சியாக எனது படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு வந்தேன். அவைகளை பார்த்தாலே நான் எந்த அறுவை சிகிச்சையும் செய்யவில்லை, உடற்பயிற்சியால்தான் எடை குறைத்தேன் என்பது தெரியவரும்’ என்றார்.
Average Rating