துப்பறியும் பெண் கேரக்டரில் திரிஷா!!
தாரை தப்பட்டை படத்தில் இயக்குனர் பாலாவிடம் பணியாற்றிய வர்ணிக் இயக்குனராக அறிமுகமாகும் படம், குற்றப்பயிற்சி. 1980 காலகட்டத்தில் நடக்கும் இந்தக் கதையில், பெண் துப்பறிவாளராக நடிக்கிறார் திரிஷா. தவிர சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்பட பலர் நடிக்கின்றனர். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து படம் உருவாகிறது.
ஒரு கொலையும், அதன் பின்னணியும் குறித்து துப்புதுலக்கும் இந்தப் படத்தில், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, பெண் துப்பறிவாளர் கேரக்டர் இடம்பெறுவது இதுவே முதல் முறை. முதல் இந்திய பெண் துப்பறிவாளரான ரஜினி பண்டித்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.