“கஸ்ரோல் ஏசியன்’ சிறந்த துடுப்பாட்ட, பந்து வீச்சாளர் விருதுகளை சங்கக்கார, முரளிதரன் பெற்றனர்

Read Time:3 Minute, 52 Second

கராச்சியில் நடைபெற்ற “கஸ்ரோல் ஏசியன்’ விருது வழங்கும் விழாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதினை குமார் சங்கக்காரவும் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை முத்தையா முரளிதரனும் பெற்றுள்ளனர். வருடத்தின் சிறந்த “கஸ்ரோல் ஏசியன்’ கிரிக்கெட் வீரருக்கான விருதினை இந்தியாவின் முன்னாள் அணித் தலைவர் சௌரவ் கங்குலி பெற்றுள்ளார். கிரிக்கெட் உலகில் தனது மீள் பிரவேசத்துடன் 2006/07 தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தின் போது சௌரவ் கங்குலி தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார். 2007 ஆம் ஆண்டில் கங்குலி சிறந்த துடுப்பாட்டத் திறனை வெளிப்படுத்தினார். 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெங்களூரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் 289 ஓட்டங்களைக் குவித்திருந்தார். கடந்தாண்டு அவர் காண்பித்த திறமைகளுக்கமைய, கடந்தாண்டின் “கஸ்ரோல் ஏசியன்’ சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. கடந்தாண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முத்தையா முரளிதரன் “கஸ்ரோல் ஏசியன்’ சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை பெற்றுள்ளார். முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜாவின் தலைமையில் நடைபெற்ற “கஸ்ரோல் ஏசியன்’ விருது வழங்கும் விழாவில் ஆசிய கிண்ணத்திற்காக வருகை தந்துள்ள பல ஆசிய கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். வசீம் அக்ரம், சனத் ஜெயசூரிய, வசீம் பாரி, ஆசிப் இக்பால் மற்றும் சாஹிர் அப்பாஸ் ஆகியோர் விருதுகளை வழங்கினார்கள்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான “கஸ்ரோல் ஏசியன்’ விருது சச்சின் டெண்டுல்கருக்கும் சிறந்த பந்துவீச் சாளருக்கான விருது மஹ்ரூப்பிற்கும் வழங்கப்பட்டது. ருவென்ரி ருவென்ரி போட்டிகளின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது கௌதம் காம்பீருக்கும் பந்துவீச் சாளருக்கான விருது உமர் குல்லிற்கும் வழங்கப்பட்டது. ருவென்ரி ருவென்ரி போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்து உலக சாதனை படைத்த இந்திய வீரர் யுவராஜ் சிங்கிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

வருடத்தின் “கஸ்ரோல் ஏசியன்’ பாகிஸ்தான் வீரருக்கான விருதை சொஹிப் மாலிக் பெற்றுக் கொண்டார். வாழ்நாள் சாதனையாளர் விருது ஹனீப் மொஹமட்டிற்கு வழங்கப்பட்டது. அஹமட் ஷேஷாட் “கஸ்ரோல் ஏசியன்’ சிறந்த பாகிஸ்தான் கனிஷ்ட வீரருக்கான விருதினைப் பெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on ““கஸ்ரோல் ஏசியன்’ சிறந்த துடுப்பாட்ட, பந்து வீச்சாளர் விருதுகளை சங்கக்கார, முரளிதரன் பெற்றனர்

  1. “Castel Asia” Very best choice, Muttayya, Mahroof, Sanga, Ganguly and all. What for Tendulkar…….He is not playing for team, doing some own buseness. When he get a century, team will not WIN.

Leave a Reply

Previous post ஐ.சி.ஆர்.சியிடம் 25 புலிகளின் சடலங்கள் கையளிப்பு
Next post இராஜகிரியவில் கடத்தப்பட்ட வர்த்தகர் விடுவிக்கப்பட்டார்