அமெரிக்காவில் விமான சாகச காட்சி நடைபெற இருந்த இடத்தில் கோபுரம் விழுந்து சிறுவன் பலி

Read Time:1 Minute, 24 Second

அமெரிக்காவில் விமான சாகச காட்சி நடைபெற இருந்த இடத்தில் திடீரென புயல் வீசி கோபுரம் சாய்ந்ததில் 5 வயது சிறுவன் பலியானான். அமெரிக்காவின் அலபாமா நகரில் உள்ள அன்ஸ்வில்லே என்னுமிடத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். பார்வையாளர்களுக்காக டென்ட் முகாம்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அப்போது திடீரென வானிலை மோசமாகி பெரும் புயல் வீசியது. இந்த புயல் காற்றில் டென்ட்டுகள் அடித்து செல்லப்பட்டுஒரு கோபுரம் சாய்ந்தது. இதில் 5 வயது சிறுவன் பலியானான். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். இதே போல புயல் காரணமாக நியூயார்க் நகரில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. போஸ்டன் நகரிலும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒமஹா, நெப்ரஸ்கா உள்ளிட்ட பல இடங்களில் புயல் காரணமாக மரங்கள் வேறோடு சாய்ந்து போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராஜகிரியவில் கடத்தப்பட்ட வர்த்தகர் விடுவிக்கப்பட்டார்
Next post அரிசோனாவில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிச் சென்ற 2 ஹெலிகாப்டர் மோதல்: 6 பேர் பலி