44 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினுக்கு யூரோ கோப்பை: இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தியது (1-0)

Read Time:5 Minute, 43 Second

யூரோ கோப்பை -2008 கால்பந்து பட்டத்தை ஸ்பெயின் கைப்பற்றியது. வியன்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 3 முறை சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது ஸ்பெயின். 44 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்க்து. இப் போட்டியில் யாரிடமும் தோல்வியுறாமல் கோப்பை வென்றுள்ளது மற்றொரு அம்சம். எதிர்த்து ஆடிய ஜெர்மனி, லீக் சுற்றில் பலம் குறைந்த குரோஷியாவிடம் தோல்வியுற்று, பின்னர் முன்னேறியது. ஸ்பெயின் அணி, இதற்கு முன்பு 1964 ஆண்டு பட்டம் வென்றது. அதுவே யூரோ கோப்பைக் களத்தில் ஸ்பெயின் குதித்த முதல் போட்டியும் கூட. அதன்பிறகு 6 முறை யூரோ கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. என்றாலும் ஒரே ஒரு முறை மட்டுமே இறுதிச்சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. 1984-ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் தோல்வியுற்று, இரண்டாவது முறையாகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. ஜெர்மனி- ஸ்பெயின் அணிகளிடையிலான இறுதி ஆட்டத்தைக் காண ஐரோப்பிய ரசிகர்கள் அழகுவாய்ந்த எர்னஸ்ட் ஹேப்பல் ஸ்டேடியத்தில் குவிந்திருந்தனர். டிக்கெட் கிடைக்காத பலர், அரங்கிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த ராட்சத திரையில் போட்டியைக் கண்டனர். வீரர்கள் களத்திற்குள் நுழைந்தது முதல் போட்டி முடியும் வரை உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. ஆட்டத்தின் 4-வது நிமிடத்திலேயே கோல் போடும் எளிதான வாய்ப்பை ஜெர்மனி பெற்றது. ஸ்பெயின் வீரர் செர்ஜியோ ராமோஸ் தற்காப்பில் செய்த தவறு, நட்சத்திர வீரர் மிராஸ்லாவ் குளோஸýக்கு எளிதான கோல் வாய்ப்பாக மாறியது. கார்லஸ் புயோலின் தடுப்பை முறியடித்து கோலை நெருங்கும்போது பந்தை சற்று ஓங்கி உதைத்துவிட்டார் குளோஸ். கட்டுப்பாடில்லாமல் பந்து வெளியே சென்றுவிட்டது. இல்லையேல், அப்போதே ஜெர்மனி முன்னிலை பெற்று ஸ்பெயினுக்கு நெருக்குதல் கொடுத்திருக்கலாம். அதன்பிறகு ஸ்பெயின் அணியினர் சிறுகச் சிறுக தாக்குதலைத் தொடங்க ஆரம்பித்தனர். இதற்கிடையே, ஜெர்மனி மீண்டும் ஒரு கோல் வாய்ப்பை விரயம் செய்தது. இதற்கிடையே ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு கிடைத்த வாய்ப்பை, ஜெர்மனி கோல்கீப்பர் மார்க் ஜென்ஸ்லீமான் பாய்ந்து தடுத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றார். இல்லையேல், இனீஸ்டா தள்ளிக் கொடுத்த பந்தை, கிறிஸ்டாப் மெட்ஜெல்டர் காலால் தொட்டுவிட்டது கோலாகியிருக்கும். இருந்தாலும் 33-வது நிமிடத்தில் ஸ்பெயின் முன்னிலை பெறுவதை ஜெர்மனியால் தடுக்க முடியவில்லை. úஸவி கடத்திக் கொடுத்தபந்தை ஃபெர்னாண்டோ டாரஸ் கச்சிதமாகக் கோலாக்கி அரங்கை அதிர வைத்தார். கோல்கீப்பர் லீமான் சற்று முன்னேறி வந்து பந்தைத் தடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். இதனால் ஜெர்மனி வீரர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர். அதே சமயம் ஸ்பெயின் வீரர்களின் அதிரடி தாக்குதல் அடங்கவில்லை.

முதல் பாதியில் 1-0 என ஸ்பெயின் முன்னிலை பெற்றது.

பிற்பாதியில் மேலும் நம்பிக்கையுடன் விளையாடிய ஸ்பெயின் சில கோல் வாய்ப்புகளையும் பெற்றது. úஸவி, சில்வா ஆகியோரின் “லாங் ஷாட்’களை ஜெர்மனி கோல்கீப்பர் லீமான் எளிதாகத் தடுத்துவிட்டார்.

இதற்கிடையே மத்திய களம் சோடைபோவதை அறிந்த ஜெர்மனி பயிற்சியாளர் ஜோஹிம் லோயு, சில வீரர்களை மாற்றி, ஆட்டத்தை சமன் செய்யப் பார்த்தார். ஆனால் அதில் வெற்றி காண முடியவில்லை.

கேப்டன் மைக்கேல் பேல்லாக், தனி ஒருவராக மேற்கொண்ட கோல் முயற்சிகளும் ஜெர்மனிக்கு உறுதுணையாக அமையவில்லை. இதனால் 4-வது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பை ஜெர்மனி இழந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “44 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினுக்கு யூரோ கோப்பை: இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தியது (1-0)

  1. Your explaining manner of this foot ball message is really took us to the stadium in which we watched it with a good commentry. Well Done and keep it up. Really Nitharsanam.Net is the Best site and I like it. Thank you.

Leave a Reply

Previous post சந்தேகத்தின் பேரில் தமிழர் இருவர் கைது
Next post போலி நாணயத் தாள்களுடன் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது