கிரகணத்தின்போது பறக்கும் தட்டுகளில் சந்திரனை கடந்து சென்ற வேற்று கிரகவாசிகள்?

Read Time:2 Minute, 23 Second

கடந்த வாரம் ஏற்பட்ட சந்திர கிரகணத்தின்போது சந்திரனை ஒரு பொருள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து சென்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கடந்த மாதம் 31ம் தேதி 152 ஆண்டுகளுக்கு பிறகு 3 அரிய நிகழ்வுகளுடன் அபூர்வ சந்திர கிரகணம் ஏற்பட்டது. அப்போது, ப்ளு மூன், ரெட் மூன், சூப்பர் மூன் என 3 நிலவுகளை மக்கள் ஒரே நேரத்தில் வெறும் கண்களால் கண்டு மகிழ்ந்தனர். இந்த அரிய சம்பவத்தை, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ நேரடியாக ஒளிப்பரப்பியது. இந்த வீடியோ காட்சிகளை யூ டியூப் சேனலான, ‘யூஎப்ஓ ேமனியா’ வெளியிட்டுள்ளது.

சந்திர கிரகணம் நிகழும் இந்த வீடியோ காட்சியை பலர் கண்டு ரசித்துள்ளனர். இந்நிலையில், இந்த வீடியோவில் வேற்று கிரகவாசிகள் கடப்பது பதிவாகி உள்ளதாக வீடியோவை பார்த்த சிலர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சந்திரனை பூமி மறைக்கும் அற்புத காட்சி நடந்தபோது சந்திரனின் இடதுபுறத்தில் இருந்து வெள்ளை நிற புள்ளி போன்ற ஒளிரும் பொருள் ஒன்று மிக வேகமாக கடந்து செல்வது பதிவாகி உள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் அந்த பொருள் சந்திரனை தொடர்ந்து கடந்து கொண்டே இருக்கிறது. அந்த மர்ம பொருள் என்ன என்பது தெரியவில்லை.

இதுகுறித்து பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. சிலர் இதை விமானம் என்கின்றனர். ேவறு சிலரோ, மனிதர்களால் உருவாக்கப்பட்ட விண் பொருட்கள் எதுவும் இவ்வளவு வேகத்தில் செல்வதற்கு வாய்ப்பில்லை என்பதால், இவை வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுக்களாக இருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உபாதை தரும் உடல் எடை!!
Next post புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட நால்வர் கைது!!