உ.பி.யில் 21 பேர் எச்ஐவி கிருமியால் பாதிப்பு : நோயாளிகளின் சிகிச்சைக்கு ஒரே ஊசியை உபயோகித்ததால் ஏற்பட்ட விபரீதம்!!

Read Time:2 Minute, 25 Second

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோவில் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. குறைந்த செலவில் சிகிச்சை என ஒரே ஊசியை பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம் அம்பலமானது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோ மாவட்டம் Bangarmau பகுதியில் உள்ள மருத்துவர் குறைந்த செலவில் சிகிச்சை என்ற பெயரில் ஒரே ஊசியை நோயாளிகள் பலருக்கு பயன்படுத்தி எச்ஐவி கிருமியை பரவச் செய்துள்ளார். இவரது அலட்சிய நடவடிக்கையால் சுமார் 21 பேர் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து Rajendra Yadav என்ற மருத்துவரை அதிகாரிகள் கண்டுபிடித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தலைமை மருத்துவ அதிகாரி (CMO) சுஷில் சௌத்ரி கூறுகையில்,’ Bangarmau பகுதியில் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக சுகாதாரத்துறையிடம் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே 2 பேர் கொண்ட மருத்துவ குழு அமைத்து Bangarmau மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம வாசிகளிடம் சோதனை நடத்தினோம். சுமார் 566 பேர் மீது நடத்தப்பட்ட சோதனையில் 21 பேர் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்தியதில் அங்குள்ள மருத்துவர்கள் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஒரே ஊசியை பயன்படுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்ட அனைவரும் KGMU மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்’, இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முடி உதிர்தலை கட்டுபடுத்த சில எளிய டிப்ஸ்!!
Next post ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு பால்வெளிக்கு வெளியே புதிய கிரகங்கள்!!