பாய்பிரண்ட்களுடன் எமி நைட் பார்ட்டி!!

Read Time:2 Minute, 25 Second

கடந்த 1970ம் ஆண்டுகளில் வெளியான மேல்நாட்டு மருமகள் படத்தில் வெளிநாட்டு நடிகை ஒருவர் கமலுடன் இணைந்து நடித்தார். ஆனால் அந்த நடிகையால் தமிழ் படங்களில் தொடரமுடியவில்லை. இன்றைக்கும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து ஒரு சில நடிகைகள் தமிழில் நடிக்கவே செய்கின்றனர். வெளிநாட்டு நடிகைகளில் வெற்றி பெற்ற நடிகைகள் ஒன்றிரண்டு பேரில் எமி ஜாக்ஸனும் ஒருவர். தமிழில் மதராஸபட்டணம் மூலம் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி படங்களில் நடித்ததுடன் இன்று ரஜினியுடன் 2.0 படத்தில் இணைந்து நடிக்கும் அளவுக்கு நீடித்து நிற்கிறார்.

எமியை பொறுத்தவரை மாடல் அழகியாக இருந்தவர். அவருக்கு கேர்ள் பிரண்ட்டை விட பாய்பிரண்ட் அதிகம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மாடல் அழகியாகவும் பூனை நடை நடந்து சம்பாத்தியத்தை விட்டுவிடாமல் கவனமாக இருக்கிறார். அதேபோல் சக பாய்பிரண்ட், கேர்ள்பிரண்ட்களுடன் டச்சிலேயே இருக்கிறார். சமீபத்தில் எமி தனது பிறந்த நாளை மும்பையில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் கொண்டாடினார். அதில் பங்கேற்க நெருக்கமான நண்பர்களை அழைத்திருந்தார். குடியும், குளிர்பானமுமாக தடபுடல் பார்ட்டியை நள்ளிரவு 12 மணிக்கு நடத்தினார் எமி. அவரை கட்டித் தழுவி அனைவரும் வாழ்த்து கூறினார்கள். தனது பட ரிலீஸ் இல்லாவிட்டாலும் திரையுலகினர், ரசிகர்கள் நினைவில் எப்போதும் நிழலாடிக்கொண்டிருக்கும் வித்தையை இதுபோன்ற பார்ட்டிகளை அரங்கேற்றி நிறைவேற்றி வரும் எமியின் தந்திரத்தை ஒரு சிலர் புரிந்தும் வைத்திருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடைக் கோரி புகார் மனு!!
Next post சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத விஷயங்கள்!!