இராஜகிரியவில் கடத்தப்பட்ட வர்த்தகர் விடுவிக்கப்பட்டார்
இராஜகிரிய பகுதியில் வைத்து அண்மையில் கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டுள்ளார் சில்வா என்ற இந்த வர்த்தகர் கடந்த 25ம் திகதி வானில் வீடுதிரும்பிக்கொண்டிருக்கையில் அடையாளம் தெரியாத கும்பலினால் கடத்தப்பட்டார் கடத்தல்காரர்கள் தன்னிடம் பத்துகோடி ரூபா கப்பம் கேட்டு தாக்கினார்கள் என விடுவிக்கப்பட்ட வர்த்தகர் பொலிஸாரிடம் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் கடத்தல் கும்பலுக்கு ஒருகோடி ரூபா வழங்க தான் சம்மதித்ததாகவும் வர்த்தகர் மேலும் தெரிவித்தார் தனது கண்களை கட்டிப் போட்ட கடத்தல் கும்பல் காடொன்றுக்குள் விட்டுச் சென்றதாகவும் பெரும்பாடுபட்டு களனி சந்திக்கு முச்சக்கர வண்டியில் ஏறி வீடு வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்த வர்த்தகரின் வாக்குமூலம் பெற்றுக் கொண்ட வெலிக்கடை பொலிஸார் இரு பொலிஸ் குழுக்களை கொண்டு விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.