போலி நாணயத் தாள்களுடன் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது
போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவரை விஷேட பொலிஸார் கைதுசெய்துள்ளனர் மதவாச்சிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இந்த கான்ஸ்டபிள் குறித்து கிடைத்த தகவலையடுத்தே இவர் கைது செய்யப்பட்டார் என அநுராதபுர விஷேட பொலிஸார் தெரிவி;த்தனர் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டதோடு இவ்வாறான போலி நாணயத்தாள்கள் அநுராதபுரம் நகரில் மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அநுராதபுர விஷேட பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.